பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)- முருகு சந்தரம் -இ இந்நில மக்கள்பால் தன்விழி செலுத்தினான்! கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள் காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின! துரக்கம் கலையாத நிலையில் அவள் மெய்ப்பாடுகளும், அவள் செயல்களும் அவள் தோற்றமும் நகைச்சுவை பொருந்தக் கவிஞரால் வருணிக்கப்படுகிறது. தேய்ந்த துடைப்பம் நல்ல உவமை. அரிசிமாக் கோலம் அமைத்த குடும்பவிளக்கின் தலைவிக்குப் பகலவன் பொன்னொளியைப் பரிசிலாக நீட்டினான். ஆனால் இருண்டவீட்டுத் தலைவியின் நிமிர்ந்த முகத்தைப் பார்த்த பகலவன் கண்கள் நடுங்கினவாம். சுவையான முரண். குடும்ப விளக்கின் தலைவி விருந்தோம்பலை ஒரு கலையாகப் பயின்றவள். நற்றமிழர் சேர்த்தபுகழ் ஞாலத்தில் என்னவெனில் உற்ற விருந்தை உயிரென்று பெற்றுவத்தல் - என்பதும் இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற் றிருக்கையிலே தொட்டுப்பார் உன்நெஞ்சைத் தோன்று மின்பம் - என்பதும் குடும்ப விளக்கின் கொள்கை. தங்கம் விருந்தினரை வரவேற்பதும், மகிழ்ச்சியோடு ஒம்புவதும் விருந்தோம்பல் பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சோற்றை அள்ளுங்கால் துவள்வாழைத் தண்டில் உறும் சாற்றைப்போ லேவடியத் தக்கவண்ணம் ஊற்று நெய்யை;