பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ பனிகொட்டத் தொடங்கிவிட்டது சூறைக்காற்றும் சுழன்றடிக்கிறது புயலோடு கூடிய இரவின் ஆதிக்கம் எனக்குத் தெரிகிறது சாவு என்னும் கொடிய எதிரியின் முகாம் என் காட்சிக்குத் தெரிகிறது தடைகளைத் தகர்த்து என் பந்தயத்தை முடித்து என் இலக்கையும் தொட்டுவிட்டேன் ஆனால் - பரிசைப் பெறுவதற்குமுன் மீண்டும் ஒரு போர் நான் போருக்கு அஞ்சுபவன் அல்ல புகழ்பெற்ற என்நாட்டுப் போர்மறவர்போல் போரிட்டு இதில் நான் வெற்றிகொள்வேன் என்று சாவை எதிர்த்து ஆர்ப்பரிக்கிறான் பிரெளனிங். அவன் சாவை வென்றானா? ஆம், வென்றான். அவன் பெற்ற வெற்றிகளின் நினைவுச் சின்னங்கள்தாம் அவன் தனக்குப் பின் விட்டுச் சென்ற படைப்புக்கள். அவன் வாழ்ந்த காலத்திலும் இலக்கியவாதிகள் அவன்மீது சரமாரியாகக் கண்டனக் கணைகள் வீசினர். அவற்றை அவன் புன்னகையோடு ஏற்றுக் கொண்டான். “நான் மிக ஆழமானவன் என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்’’ என்று அவர்களைப் பார்த்துச் சொன்னான். இறந்த பிறகும்கூட இலக்கிய வாதிகளின் எதிர்ப்பு ஒயவில்லை.