பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம்-இ) ஒவ்வொன்றாக அவையெல்ல்ாம் ஒரு பெண்ணின் உடலை அவள் கணவனும் குழந்தைகளும் தின்பதாக ஒரு காட்சி இதில் வருகிறது. இதன் பொருள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்காதது. படிப்பவரின் சிந்தனையைப் பொருத்து அதன் பொருள் விரியும். நனவோடை உத்தி @gog, eggsäußsoš@cb Stream ofconsciousness grairi iñ. இதை முதன் முதலில் கையாண்டு உலிசிஸ் என்ற நூலை எழுதியவன் ஜேம்ஸ் ஜாய்ஸ். நனவோடை உத்தியைத் தமிழ் உரைநடையில் பயன்படுத்தி வெற்றிகண்டவர் லா.ச.ராமாமிர்தம் அவர் இதைப்பற்றி விளக்கும்போது, "இந்த உத்தி நமக்குப் புதிதன்று. நம்முடைய பண்புக்கு ஆச்சாரத்துக்கு ஒத்ததெல்லாம் நனவோடை உத்திதான். நமது பண்பாடு தானே தியானம், பக்தி, ஆழ்நிலை தியானம் எல்லாம்” என்று குறிப்பிடுகிறார். உள்ளத்தை ஒரு முகப்படுத்தி ஆழமாகச் சிந்திக்கும்போது தன் மன ஓட்டத்தைப் பதிவு செய்தலே நனவோடை உத்தி. அப்போது தோன்றும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் இருக்கலாம். படைப்பாளரின் உள்ளப்பக்குவம் எத்தகையதோ, அப்பக்குவத்தை உணர்ந்தவரே அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும். அப்போது கவிதையில் இருண்மை தோன்றுவது இயல்புதானே? லா.ச.ராவை ஆதர்ச குருவாக ஏற்றுக்கொண்டவர் அபிபுல்லா. அபிபுல்லாவின் அபத்தம் என்ற கவிதை நனவோடை உத்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.