பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -இ ஏட்டுப் பிரதியை எடுத்தவர் தந்தால், இனிய பாடலைக் கற்றவர் சொன்னால், காட்டில் இருளைக் கடந்திடல் ஆகும் கருணை செய்தவர் ஆவீர், ஐயா! முன்பொரு பாடல் எழுதினேன் - அந்த மூலப் பிரதி கைவசம் இல்லை ஒரு முறை திருலோகம் ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்தபோது, பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர் யார்? - என்று இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "யார்!’ என்று கூறிப் பெருமிதத்தோடு தம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார் என்று எழுதியது அந்த ஏடு. ‘நான்தான்’ என்று பொருள் தரும்படி இருந்தது அந்தச் சிரிப்பு. பாரதிக்குப் பின் சிறந்த கவிஞனாகத் தாம் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை அவருக்கிருந்தாலும், அவருடைய படைப்புகள் எதுவும் மக்களைச் சென்றடையவில்லை. அவர் கவிதைப் படைப்பு மிகச் சொற்பம். அவர் பேச்சில் எட்டிய உயரத்தை, எழுத்தில் எட்ட வேண்டும் என்று அவர் முயற்சி செய்யவில்லை.