பக்கம்:மதன கல்யாணி-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மதன கல்யாணி யினாலும் நான் அந்த அவதூறை உன் பேரில் சொல்லி விட்டேன். அந்தக் குற்றம் மாத்திரம் மிகவும் பெரியது தான், உன்னுடைய அக்காள், தங்கை, அல்லது தாய் உன் விஷயத்தில் ஏதாவது குற்றம் செய்தால் அதை நீ எப்படி மன்னிப்பாயோ அது போலவே என்னையும் ஒரு தாய் போல் மதித்து நீ கூடிமித்துக் கொள. என்னால் உன்னுடைய உத்தியோகங்கள் போன விஷயத்தில் இரண்டு லட்சமல்ல நான்கு லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் இந்த நிமிஷத்தில் நான் செக் எழுதிக் கொடுத்துவிடுகிறேன். நீ இதற்காக என்னைக் கச்சேரிக்கு இழுப்பதும், பத்திரிகை மூலமாக இதை மறுக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்துவதும், உன்னுடைய தயாள குணத்துக்குக் கொஞ்சமும் தகாத காரியம்; அப்படிச் செய்தே தீரவேண்டும் என்று நீ வற்புறுத்துவாயானால், என்னிடத்தில் பாஷாணம தயாராக இருக்கிறது. அதைத் தின்று உடனே என்னுடைய உயிரை விட்டுவிட உறுதி செய்து கொண்டிருக்கிறேன்" என்று மிகவும் பணிவாகவும் நயமாகவும் கூறினாள். அதைக் கேட்ட மதனகோபாலன், "அம்மணி தாங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் நான் வேதவாக்கியமாக நம்பிவிட்டேன். இந்த விஷயத்தில நானே எஜமானாக இருந்தால், தங்களுடைய பரிதாபகரமான முகத்தை நான் சற்றுமுன் பார்த்த போதே தாங்கள் என்னை மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, இநத நோட்டீஸ் கொடுத்ததற்காக நானே தங்களுடைய மன்னிப்பைக் கேடடுக் கொண்டு, தங்களை அனுப்பி இருப்பேன். ஆனால் என்னை அபிமான புத்திரனாக வளர்த்துக் காப்பாற்றி வரும் பெரியவருடைய உத்தரவின்படி இந்தக் காரியம் நடந்திருக்கிறது. ஆகையால், அவர்களுடைய தகவலில்லாமல் நான் எதையும் செய்ய சக்தியற்ற வனாக இருக்கிறேன. அவர்கள் இப்போது பங்களாவில் இல்லை. அவர்கள் திரும்பி வந்தவுடனே தாங்கள் இங்கே வந்து என்னிடம் கூறிய விவரங்களை எல்லாம் அவர்களிடத்தில் தெரிவித்து, நானும் தங்களுக்காகப் பரிந்து பேசி என்னாலான வரையில் முயற்சி செய்து பார்க்கிறேன். நேற்று நடந்த சம்பவத்திலிருந்து தங்கள் விஷயத்தில் அவர்களும் மிகுந்த அனுதாபத்தோடு தான் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/94&oldid=853497" இலிருந்து மீள்விக்கப்பட்டது