பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

67



எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பதைக் கவிஞர் பொது விதியாக்கினார். மற்றவர்களது பழக்க வழக்கங்களையும், மொழி உணர்வுகளையும் கேலி பேசிடாமல், மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடக்குமாறு அம்மாணவ மணிகளுக்கு கல்வியோடு கல்வியாகக் கற்பித்தார்.

பொருளாதார இடையூறுகள்

சாந்திநிகேதன் பள்ளியின் பழக்க வழக்கம் அக்காலத்திலிருந்த கல்விமுறைப்படி இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இதை இந்திய மக்களும், குறிப்பாக உலகக் கல்வியாளர்களும் உணரும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு சிறந்த கல்விமுறைப் பள்ளியை உருவாக்குவது என்றால் சாமான்யமான வேலையா என்ன?

கவிஞர் தாகூர் இப்பணி வெற்றிகரமாக அமைய அரும்பாடு பட்டாலும், அந்த முயற்சிகளும், சிந்தனைகளும், ஆக்கவேலைகளும் அவருக்குச் சலிப்பைத் தரவில்லை மகிழ்ச்சியையே வழங்கின. ஆனால், இதற்கெல்லாம் பணம் வேண்டாமா?

தாகூர் மனைவியான மிருனாளினி தேவியார் உயிரோடு இருந்தபோது பெட்டிக்குள் பூட்டிவைத்திருந்த தனது நகைகளை எல்லாம் கணவரிடம் கொடுத்து, பள்ளிப் பணிகளைக் கவனிக்க ஏற்பாடு செய்தார்!

நகைகளை எல்லாம் கொடையாகக் கொடுத்த மிருணாளினி தேவியார் 1902ஆம் ஆண்டில் சாந்தி நிகேதனிலேயே மரணமடைந்தார். கவிஞருக்கு இது மிகப்பெரிய இடையூறாக அமைந்து விட்டது. மனைவியைப் பறிகொடுத்து விட்ட மறு-