பக்கம்:மதன கல்யாணி-3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 மதன கல்யாணி குதுகலமும் அடைந்து கதவைத் திறந்து கொண்டு, "அண்ணா! அண்ணா!" என்று மிகுந்த வாத்சல்யத்தோடு மதனகோபாலனை விளித்தவளாய் ஓடிவந்து அவனைக் கட்டித் தழுவினாள். Yk ★ ★ 35-வது அதிகாரம் பஞ்சகல்யாணி Gഥക്കേ குறிக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்த பிறகு அந்த இரண்டு குடும்பங்களினது விஷயங்களின் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து ஒழுங்குப்பட சுமார் மூன்றுமாத காலமாயிற்று. கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் தனுஷ்கோடிப் போலீஸ் தலைவருக்கு அனுப்பிய அவசரத் தந்திக்கு அன்றைய தினமே நல்ல மறுமொழி கிடைத்தது. கிழவர் அன்றைய மாலை வண்டியிலேயே ஏறி மறுநாள் தனுஷ்கோடிக்குப் போய்ச் சேர்ந்து, போலீஸ் கச்சேரியில் இருந்த துரைராஜாவைக் கண்டு நயமான வார்த்தைகளைக் கூறி, அவனைத் தைரியப்படுத்தி அழைத்து வந்து, மனோகர விலாசத்தி லேயே வைத்திருந்து அவனுக்கு நல்ல புத்திகளைச் சொல்லி, தமது சந்தனக்கட்டை வியாபாரத்தை அவனே நிர்வகிக்கும்படி செய்து, அவன் தனது துன்மார்க்கங்களை எல்லாம் விட்டு நல்ல வழியில் நடந்து கொண்டால், அவனுக்குப் பெருத்த திரவியம் கொடுப்ப தாகவும், அழகிலும், குணத்திலும், ஒழுக்கத்திலும் நிகரற்றவளான மோகனாங்கியை அவனுக்கே கட்டிக் கொடுப்பதாகவும் வாக்களித் திருந்தார். அவனும் அவ்வாறே உண்மையிலேயே திருந்திப் போய், அவனைப் போல நற்குணமுள்ள பிள்ளை வேறே இருக்க மாட்டான் என்று எல்லோரும் கொண்டாடத்தக்க புதிய மனிதனாகி விட்டான். மோகனாங்கி, சகலவித நலன்களும் சிறப்புகளும் வாய்ந்தவளாக இருந்தும், அவள் அநாதை என்பதும், ஒரு பிடில் காரனுடைய மகள் என்பதும் கச்சேரியில் ருஜூவாகி விட்டமை யால், அவளை வேறே தக்க இடத்தில் கலியாணம் செய்து கொடுக்க சாத்தியப்படா தென்பதைக் கிழவர் கண்டு கொண்டார். அதுவும் நிற்க, அவள் மைசூரில் பெண் பாடசாலையில் படித்திருந்த காலத்தில் ஒர் உபாத்தியாயர் அங்கிருந்த பெண்களில் பலரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/271&oldid=853417" இலிருந்து மீள்விக்கப்பட்டது