பக்கம்:மதன கல்யாணி-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 123 குற்றத்தின விவரம முதலியவற்றையாகிலும் தங்களுக்குச் சொல்லும்படி அவர்கள் வேண்டிக் கொண்டதும் பயனற்றுப் போயிற்று. அவர்கள் இருவரும் நிரமபவும் கீர்த்தி வாய்ந்த பெருத்த பெருத்த இரண்டு பாரிஸ்டர்களை உடனே அமர்த்திக் கொண்டு நேராக மாஜிஸ்டிரேட்டினது கச்சேரிக்குப் போய் மைனரை ஜாமீனின் மேல் விடும்படியாகவும், போலீசாரின் அறிக்கைகளுக் கெல்லாம் நகல் கொடுக்கும்படியாகவும் வாதாடச் செய்தார்கள். அந்த முயற்சியும் பலியாமல் போயிற்று. அதன பிறகு அந்த பாரிஸ்டர்கள் இருவரும் அந்த விஷயமாக ஹைகோர்ட்டிற்கு அப்பீல் செயதாாகள; குற்றவாளி கையும் மெய்யுமாகப் பிடிபட் டிருப்பதால், ஜாமீனில் விடுவது சட்ட விரோதம் என்றும், மாஜிஸ் டிரேடடு செய்த தீர்மானம் சரியானதென்றும் ஹைகோர்ட்டார் அபிப்பிராயப்பட்டு மனுவைத் தள்ளிவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மைனரது விஷயத்தில், எவ்வித உதவியும் செய்ய மாட்டாமல் விசாரணைத் தேதியையே எதிர்பார்க்க நேர்ந்தது. கல்யாணியம்மாளுக்கு அதுகாறும் வந்த எத்தனையோ இடர்களை விட, அது ஒன்றே இமயமலை போல மிகவும் பெருத்த அபாய மாகவும் அவமானமாகவும் தோன்றியதன்றி, அவ்வளவோடு தங்களது குடும்பத்திறகே முடிவு காலம் ஏற்பட்டுவிட்டதாகவும் மதித்துவிட்டாள். தனது சமஸ்தானத்தை எல்லாம் விற்றாகிலும் மைனரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஓர் உறுதியை அவள் செய்து கொண்டாள். ஆனாலும், அவளது பொருட்களைப் பெற்றுக்கொள்ள வக்கீல்களைத் தவிர வேறே எவரும் ஒருப்பட வில்லை. ஆனால், நிரம்பவும் ஏராளமான பணத்தை வாரி இறைத்ததன் பலனாக அவர்கள் ஒரே ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டனர். அந்த வழக்கு மூன்றாவது நாள் ஹைகோர்ட் ஜட்ஜியின் முன்னால் விசாரிக்கப்படப் போகிறதென்பதொன் றையே அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அன்றைய தினமாகிலும் தாங்கள நாலைந்து வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் நியமித்து மைனரை விடுவிக்கச் செய்ய வேண்டும் என்று அவர்கள் உறுதி செய்து கொண்டிருந்தனர். கருப்பாயி மரணாந்த காலத்தில் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறாள் என்பதையாகிலும், அவள் கிருஷ்ணா புரத்து பங்களாவில் வெளியிட்ட விஷயங்களையாகிலும் அவர்கள் அறிந்து கொள்ளாமலே இருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/127&oldid=853257" இலிருந்து மீள்விக்கப்பட்டது