பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கலீலியோவின்


அது மட்டுமா? மனிதன் எவ்வளவு தான் புகழேணி ஏறி உச்ச நிலையில் இருந்தாலும் உன்னதமான புகழும், செல்வமும் பெற்று வாழ்ந்தாலும், அவன் அந்த நிலையிலே இருத்து; உட்பகையாலும், உடன் பகையாலும்! புறவிரோதிகளாலும் உருட்டி விடப்பட்டால் தலைகுப்புற வீழ்ந்து சாகவேண்டிய அபாயம் தானே அவனுக்கு வரும்.

ஆனால், கலீலியோ இந்த மனிதப் பகைக்கு விதிவிலக்காகக்கூட இல்லை; முழு விரோதியாகவே அவரை கிறித்தவ குருமார்கள் சித்தரித்துக் காட்டிவிட்டார்கள்.

அதனால், தமக்கென வாழாது மனித நேயத்தின் நலவாழ்வுக்கும், வளவாழ்வுக்கு பாடுபடும் பேரறிவாளர்களுக்கு எல்லாம் வாழ்வில் தாழ்வும், துன்பமும் நேருவது சர்வ சாதாரணமாகி விட்ட உலக இயல்பாகி விட்டது.

இந்த வேதனை வாழ்க்கை; மனித இனத்திற்கு எவ்வளவு பெரிய தீராப்பழியாகவும், பாவமாகவும், அமைகின்றது. என்பதை நாம் என்னும் போது, நமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை வழங்கும் மனபாரமாகவே அது மாறுகின்றது.

கலீலியோவின் வாழ்க்கை என்ற சுமைதாங்கியில் இந்த மன பாரத்தை நம்மால் இறக்கிவைத்து இளைப்பாற முடியுமா? இது மனித குலத்தின் கேள்வி!

இந்த கேள்விக்கு அனுபவம் உள்ள மனித குல நேயர்களது வாழ்க்கை தான், அவரவர் மன உரத்திற்கேற்றவாறு பதில் கூற இயலும்-இல்லையா?

ஆனால், கலீலியோ போன்ற அறிவியல் உலகத் தியாக சீலர்கள், உண்மைக்காக தங்களையே பலிகொடுக்துக் கொண்டவர்களுக்கு இந்த நன்றி கெட்ட உலகம் மகிழ்ந்து அளிக்கும் பரிசு என்ன?

காலமெல்லாம், கல்லைறையான பிறகெல்லாம், அவதூறுகனை வாரி இறைத்து வரலாற்றுக் களங்கத்தை உரு-