பக்கம்:மதன கல்யாணி-3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மதன கல்யாணி வைத்ததற்கு நீர் இப்படிச் செய்தது மகா பாதகம் என்பதை இப்போதாவது ஒப்புக்கொண்டீரே! அது ஒன்றே போதுமானது. பணமென்பது மகா பொல்லாத வஸ்து. உறவு முறைமை, சிநேகம் முதலிய எந்தப் பாசமும் பணத்துக்கு முன்னால் நிற்குமா? ஒருகாலு மில்லை. இது உலக இயற்கை; நீர் எவ்வளவோ படித்திருந்தாலும், வக்கீல் உத்தியோகத்தில் எவ்வளவோ பணம் சம்பாதித்திருந்தாலும், உமக்குப் பூர்வீகமான சொத்து அதிகமாக இருந்தாலும், இப்படிப் பட்ட பணத்தாசையும், மோசக் கருத்தும் உமக்கு இல்லாமற் போகவில்லை. குற்றம் செய்தவரைத் தண்டிக்க, ஈசுவரனிருக்கிறான். ஆகையால், நான் உமக்கு எவ்விதமான தீங்கும் நினைக்கமாட்டேன். உம்மைப் பத்திரமாக வண்டியில் வைத்து உம்முடைய வீட்டில் கொண்டு போய்விடச் செய்கிறேன். இங்கே இருந்த சிலர் என்னுடைய அனுமதியில்லாமல் உம்மை உபத்திரவப்படுத்தி விட்டது எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது. எழுந்திரும்" என்று கூறி, அவரைத் துக்கி நிறுத்தி வெளியில் அழைத்துக் கொண்டு போய், அங்கே இருந்த ஒரு மோட்டார் வண்டியில் உட்கார வைத்து, தமது ஆட்களில் நால்வரையும் பாதுகாப்பாக வைத்து, வண்டியை அவரது ஜாகைக்கு அனுப்பிவிட்டு உள்ளே - வந்தார். * * * அதற்குள், அங்கே கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் எழுந்து நடந்து வெளிப்பட்டு, இடைவழியில் வந்த ஜெமீந்தாரிடத்தில் விடைபெற்றுக் கொண்டு வெளியில் போய் தத்தம் வாகனங்களில் ஏறிக் கொண்டு போகலாயினர். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் உள்ளே போவதற்குள் விருந்தினர் யாவரும் வெளியில் போய் விட்டனர். அப்போதும், அவ்விடத்தில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த ராஜாயியும், மோகனரங்கனும் அங்கே நடந்த பெருத்த கலகத்தையும், குழப்பத்தையும், அதன் காரணம் என்ன என்பதையும், தாங்கள் வந்தவுடனே சிவஞான முதலியாருக்கு அப்படிப்பட்ட அவமரியாதையும் துன்பமும் நேர்ந்த காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள மாட்டாமல் திகைத்து நடுங்கி நின்ற சமயத்தில், மதனகோபாலன் அவர்களண்டையில் வந்தான். அவனைக் கண்ட ராஜாயி, "ஐயா இன்றைய தினம் விருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/251&oldid=853395" இலிருந்து மீள்விக்கப்பட்டது