பக்கம்:மதன கல்யாணி-3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 மதன கல்யாணி அவனைப் பார்க்க ஒருவேளை முயற்சி செய்து கொண்டிருப்பான்; எப்படியும் வந்துவிடுவான். அதைப்பற்றிக் கவலையில்லை. அது போகட்டும். எனக்குத் தெரியாமல், நீங்கள் குழந்தை கண்மணி யம்மாளுக்கு நிச்சயதார்த்த முகூர்த்தம் ஏற்படுத்திய தெய்வ சங்கல்பத்தினாலேயே தடைபட்டுப் போனதென்று நினைக்கிறேன். கண்மணியம்மாள் நல்ல உத்தமி. அவளுக்கு மாத்திரம் அந்தப் பையனுடைய முகத்தில் விழிக்கவே கூடாதென்ற உறுதி ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. என்ன மீனாகூஜி ஹைகோர்ட்டில் ஏற்பட்ட தீர்மானத்தின் விவரங்களை எல்லாம் கேட்டாய் அல்லவா?" என்றார். உடனே மீனாகூஜியம்மாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து, "ஹைகோர்ட்டாரும், நீங்களும், இந்த மதனகோபாலன் தான் உண்மையான மைனர் என்பதை இப்போது தான் கண்டுபிடித் தீர்கள். நம்முடைய குழந்தை கண்மணியின் மனசில் இந்தக் குறிப்பை ஏற்கெனவே ஈசுவரன் காட்டிவிட்டான். ஆரம்பத்தில் இருந்தே அவளுடைய பிரியமெல்லாம் இந்த மதனகோபாலன் மேலே தான் விழுந்துவிட்டது. இந்த விஷயத்தில் நான் என்ன சொல்லியும் கேளாமல் அவள் ஒரே பிடிவாதமாக இருந்து வந்தாள். கடைசியில் நாம் எல்லோரும் முட்டாளானோம்; அவள் திரிகாலக்ஞானமுள்ள முனிசுவரர் போல, பின்னால் நடக்கப் போவதை முன்னால் அறிந்தே அப்படி நடந்தாள் என்று நாம் எண்ண வேண்டியிருக்கிறது" என்று குதுகலமாகப் பேசினாள். அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் கரைகடந்த சந்தோஷ மடைந்தவறாய் நகைத்து, "அப்படியானால் கண்மணியம் மாளுடைய காட்டில் மழை பெய்தது குழந்தாய்! கண்மணி! கவலைப் படாதே! உன்னுடைய மனோபீஷ்டம் வெகு சீக்கிரத்தில் நிறைவேறப் போகிறது! யார் மனசு வைத்தாலும் என்னுடைய தலைவிதி மனசுவைக்க வேண்டாமா என்று அன்றைய தினம் ராத்திரி நீ மதனகோபாலனிடம் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இனி உன்னுடைய தலைவிதியும் மனசு வைத்து விட்டதென்றே நீ நிச்சயமாக நினைத்துக் கொள்ளலாம். எங்கே? ஏன் அப்படி நாணி மறைகிறாய்? நீ இனி எப்படி மறைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/257&oldid=853401" இலிருந்து மீள்விக்கப்பட்டது