பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

51



முதன் முதலாக அவர் தனது சுற்றுப் பயணத்தை எகிப்து நாட்டில் துவக்கி, பிறகு சைரக்யூஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று, சிறப்பானவரவேற்புகளைப் பெற்று, சோலி என்ற நகரை நிறுவி பின் சார்டிஸ் நகர் வந்தார்.

சட்ட மேதை சோலான், பலதரப்பட்ட மக்கள் ஒரு நாட்டில் கூடி வாழ்வதற்கான அரசியல் சட்ட நூல் ஒன்றை இயற்றியிருந்தார். தான் எழுதிய சட்ட விதிகள் தனது காலத்திலோ, பின்னாலோ எக்காரணத்தைக் கொண்டும் மாற்றியமைக்கும் அல்லது சட்டத் திருத்தம் செய்யும் இக்கட்டான ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பிற நாடுகளில் சட்டங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை ஆராயவும், அவர் பிற நாடுகளை எல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்து, அங்குள்ள மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அறிந்திட பத்தாண்டுக் காலமாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்தப் பயணத்தின் போது அவர் சார்டிஸ் நகருக்கும் வந்திருந்தார். ஏனென்றால், அந்த நாட்டில் பல்வேறு இன மக்கள் வாழ்கின்றதால், அங்குள்ள மக்களிடையே அரசியல் சட்டங்கள் எப்படி இயங்குகின்றன என்பதையும், உலக நாடுகளில் சட்டம் எவ்வாறு அமுலாகின்றது என்பதை அறியவுமே அந்தப் பயணத்தை மேற்கொண்டு, அந்த நகருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு காரணமாகும்.

இந்த நேரத்தில் குரோசஸ் ஏதென்ஸ் நாட்டில் இல்லாததால், அவர் எழுதிய சில சட்டங்களை மாற்றியமைக்க முடியாமல் குழப்பமடைந்தார்கள் ஏதென்ஸ் மக்கள்.

ஏனென்றால், அவர் எழுதிய சட்டங்களின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள அவருக்கு பத்தாண்டுக் காலக் கெடுவை ஏதென்சு மக்கள் அப்பொலோ தெய்வத்தின் மீது சத்தியம் செய்து கொடுத்திருந்தார்கள். அவரில்லாமல் எந்தச் சட்டத்தையும்