பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 'செப்பு மொழி பதினெட்டு உடையவள் பாரத மாதா' என்றிருந்தாலும் அவள் சிந்தனை எல்லாம் ஒன்றாகவே இருந்திருக்கிறது.

என் நாட்டு மக்கள் அனைவரும்
ஒன்றாய் உயிரும் உள்ளமும் இசைந்து
வென்று வாழ்வுற விமலனே அருள்க!

என்று தாகூர் பாடும்போது அத்தனை கவிஞர்களும் சேர்ந்து குரல் எழுப்புவதாகவே தெரிகிறது. இப்படித்தான் கவிதைக் கலை பாரத சமுதாயத்தில் வளர்ந்திருக்கிறது.

கவிதையை ஒட்டியே இசையும் வளர்ந்திருக்கிறது நம் நாட்டில். அந்த இசை எல்லோருடைய இதயங்களையும் இசைக்கும் ஆற்றலை உடையதாக இருந்திருக்கிறது. இன்னும் மக்கள் பாடும் இசையும், வாத்தியங்கள் மூலம் இசைக்கும் இசையும், நாடெங்கும் பரவி இருக்கின்றன. தென்னாட்டில் ஒரு நாதசுரம் என்றால் வடநாட்டில் ஒரு ஷெனாய் என்று வாத்தியங்களில் கூட ஒரு ஒருமைப்பாட்டைக் காண்கிறோம். தமிழிசையில் பண்கள் சிறப்பானதாக இருந்து நாட்டில் இசை வளர்ந்திருக்கிறது. கர்நாடக சங்கீதம் நம் காதுகளுக்கு இனிமையாய் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதையே வடநாட்டுச் சகோதரர்கள் அனுபவிக்கும் அளவுக்கு வளர்த்திருக்கறோம். பாரத நாட்டு இசையின் சிறப்பைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு தனிப்பேச்சே பேச வேண்டுமேயொழிய, ஒரு சிறிய பேச்சில் இடைப் பரவலாகக் கூறிவிட முடியும் என்று தோன்றவில்லை. பாரத

15