பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

உணர்ச்சிகளை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்துகிற திறம் படைத்ததுதான் கலை, கலை அந்த அந்த நாட்டின் கலாச்சாரத்தை விளக்கும். சான்றாக அமையும். இந்தியக் கலைகள் இருபத்தி நான்கு என்று ஒரு கணக்கு.

ஆய கலைகள்
அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும்
என்னம்மை

என்று தமிழ்க் கவிதையில் கலைகளின் அதி தேவதையாகிய - கலைமகள் பேசப்படுகிறாள். இலக்கியம், இலக்கியத்தோடு தொடர்பு கொண்டவை, வீட்டிலும், வாழ்விலும் அழகையும் சுவையையும் உண்டாக்குபவை, அலங்காரங்களுக்கானவை, அறிவு விருத்திக்கு உதவுபவை, விளையாட்டுக்களை வளர்ப்பவை போன்று பல பல துறைகளில் இக்கலைகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இத்தனையையும் பற்றி ஒரு ஜாபிதா கொடுக்கவோ, அவற்றுக்கு விளக்கம் தரவோ நான் முற்படப் போவதில்லை. அழகுக் கலைகள் என்ற அருங்கலைகளில் முதலிடம் பெறும் கவிதை, இசை, சித்திரம், நடனம் என்னும் கலைகளைப் பற்றி மட்டும். ஒரு சில வார்த்தைகள் சொல்ல முனைகின்றேன். இந்த அருங் கலைகள் ஒருவருக்குக் கைவரப் பெறுவது ஏதோ இறை அருளால்தான் ஏற்பட வேண்டுமே ஒழிய, கற்றுத் தெளிவது அல்ல அவை, இதை அழகாக சில்ப ரத்தினம் என்ற கதை தெளிவாக்குகிறது.

13