பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

இன்னும் ஒரு விஷயம். ஒரு பொருள், ஒரு நிகழ்ச்சி எப்படி இருந்தது என்பதைக் காட்டுவது மட்டும் கலைஞன் தொழில் அல்ல. எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் காண்பவரது உள்ளத்தைக் கவரும், கேட்பவரது உள்ளத்தை உருக்கும் என்றெல்லாம் தெரிந்து அதன்படி அமைப்பதுதான் அவனுடைய தொழில். ஒரேயொரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு பெண், ஆம் மறுபடியும் பெண் தான். அவளே ஒரு கலைப் பொருள்தானே. தன் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்கிறாள். எப்படி இட்டுக் கொள்கிறாள்? வீட்டில் இருக்கும் ஒரு சிறு கண்ணாடியைத் தன் இடது கையில் எடுத்துக் கொள்கிறாள். வலது கையில் உள்ள நடு விரலால் குங்குமத்தையோ, வர்ணச் சாந்தையோ குழைத்து எடுத்து ‘பிறை’ போன்ற நெற்றியிலே நல்ல மத்திய ஸ்தானத்தைக் கைக் கண்ணாடி மூலம் பார்த்துப் பொட்டிட்டுக் கொள்கிறாள். இதைத் தினமும் நாம் பார்க்கிறோம், ‘நல்ல திலகம் கிடந்த திரு நுதல்’ என்றும் பாடுகிறோம். இப்படிப் பொட்டிட்டுக் கொள்ளும் போது, வலது கை அநேகமாக முகம் முழுவதையும் மறைத்துக் கொள்கிறது. அப்படி முகத்தை மறைத்துக் கொண்டு பொட்டிட்டால் அந்தப் பொட்டு தன் முகத்திற்கு எவ்வளவு சோபையைத் தருகிறது என்பதை அந்தப் பெண் அப்பொழுதே தெரிந்து கொள்ள முடியுமா? பொட்டிட்டு விட்டு ஒவ்வொரு தடவையும் தன் கையை எடுத்து எடுத்துத்தானே, அப்பொட்டால் ஏற்படும் அழகை அவள் காண வேண்டியிருக்

95