பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மருத்துவ விஞ்ஞானிகள்


பட்டுப்பூச்சிகள் இலட்சக் கணக்கில் அந்த நோயால் செத்தன. அதனால் ஃபிரான்ஸ் நாட்டில் பட்டுத்தொழில் நலிவடைந்தன. பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள வாழ்க்கை - கொடுமையாக, கொடுரமாக இருந்தது.

இந்தப் பட்டுப்பூச்சிகள் நோயை லூயி பாஸ்டியர் எவ்வாறு கண்டுபிடித்தார்? அதற்காக அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புச் சாதனை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்று: உலகுக்கு எப்படிப் பயன்பட்டது என்ற விவரத்தை இதே நூலின் முதல் அதிகாரத்திலே படித்தீர்கள்!

கவனத்திலிருத்த வேண்டுமானால், மறுமுறையும் அதைப் படிப்பது நல்லது. அதற்குப் பிறகே லூயி பாஸ்டியர் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

ஆடு, மாடு, கோழி, பன்றிக்கு வந்த
‘ஆந்தராக்ஸ்’ நோய்க்கு மருந்து!

பட்டுப் பூச்சிகள் நோயைக் கண்டறிந்து, அதற்குரிய அறிவியல் வழி முறைகளை லூயி பாஸ்டியர் சோதனைகளால் நிரூபித்துக் காட்டிய பின்பு, அந்த நடவடிக்கைகளை ஃபிரான்ஸ் நாடு பின்பற்றியதால் பட்டுப்பூச்சிகள் நோய் நீங்கி, அந்தத் தொழில் மீண்டும் புதுவாழ்வு பெற்றது. இதனால் பட்டு வணிகத் துறையினர் பாராட்டினர்! பிரெஞ்சு அரசும் லூயியைப் பாராட்டி பரிசுகள் வழங்கியது.

அதற்குப் பிறகு லூயி பாஸ்டியருக்கு இடது - காலும், இடது - கையும் செயலற்றுப்போய் விட்டன. தொழிற்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புதுவழிகளைத் தனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் மூலமாகக் கைகாட்டி மறவாழ்வளித்தவர் லூயி. அத்தகை ஒரு பரோபகாரிக்கு கைகால் வீழ்ச்சி என்றால், மனம் வேக்காடாகாமலா இருக்கும்?