பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

அறத்தின் குரல்


“இவர்கள் புறத் தோற்றந்தான் அழகாக இருக்கிறது. உள்ளம் குருரமாக இருக்கிறது’ என்றெண்ணிக் கொண்ட அர்ச்சுனன் தயக்கத்தைப் போக்கிக் கொண்டு போரைத் தொடங்கினான். “தேவர்களே நுழைவதற்குப் பயப்படுகின்ற எங்கள் இரணிய நகரத்துக்குள் கேவலம் ஒரு மானிடனாகிய நீ எப்படித் துணிவோடு நுழைந்தாய்? போருக்கு வந்துவிட்டாய்! உன் முடிவு பரிதாபகரமாகத்தான் இருக்கப் போகிறது.”

“தேவர்களை ஏமாற்றி அஞ்சச் செய்தீர்கள். என்னை ஏமாற்ற முடியாது. நான் உங்களைக் கொன்று உங்கள் குலத்தைப் பூண்டோடு அழித்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்.” அர்ச்சுனன் வீர முழக்கம் செய்தான்.

அவனுக்கும் காலகேயர்களுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில் தோயமாபுரத்திற் செய்தது போலவே பாசுபதா ஸ்திரத்தை எடுத்துச் செலுத்தினான் அர்ச்சுனன். பாசுபதாஸ்திரத்தின் விளைவாக காலகேயர்கள் எனப்படும் மாயத் தோற்றங்கள் அழிந்தன. புறத்திலே மினுமினுத்து அகத்திலே வஞ்சனை செறிந்த அந்தப் பொய்யுடல்கள் இருந்த இடம் தெரியாமற் பூண்டோடு போய் விட்டன. இரணிய நகரம் என்று மேகங்களின் ஊடே தெரிந்த அந்த நகரமும் மறைந்தது. வில் நாணையே வெற்றி முழக்கத்துக்குரிய வாத்தியமாகக் கொண்டு ஐங்கார நாதம் செய்தான் அர்ச் சுனன். ‘தேவர்கள் தங்கள் பகைவர்கள் யாவரும் தொலைந்தனர்’ என்றெண்ணி மகிழ்ந்தனர். மாதலி வெற்றி மிடுக்குடன் தேரை வானவருலகத்துத் தலைநகரை நோக்கிச் செலுத்தினான். தன் கட்டளைகளை நிறைவேற்றி அர்ச்சுனன் வெற்றி வாகை சூடி வருகிறான் என்று கேள்விப்பட்டான் இந்திரன்.

மாதலிக்கு வழிகாட்டிய சித்திரசேனன் தேர் வருவதற்கு முன்பே அமராபதிக்கு வந்து வெற்றிச் செய்திகளைக் கூறியிருந்தான். அதனால் விவரங்களை நன்கு அறிந்து