பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

முன்பு பூதம் அமைத்த புதுமையான இயக்கமுடைய பாவை இள வெயிலின்கண் தோன்றினாலொத்த நின் அழகிய நலம்’ (நற். 192) என வருந் தொடர் விளக்கும். மற்றும் இது அழியாத இயல்பினதென்பதை, ‘செவ்விய வேர்ப் பலவின் பயன் நிறைந்த கொல்லி மலையிலே, தெய்வத்தாற் காக்கப்பெறும் குற்றம் நீங்கிய நீண்ட கொடுமுடியையும் அழகிய வெள்ளிய அருவியையும் உடைய மேல் வரையிலே, காற்று மோதி அடித்தாலும், மிக்க மழை கடுமையாகப் பெய்தாலும், பேரிடி தாக்கினாலும், வேறு பல கெடுதிகள் உண்டானாலும், பெருநிலங் கிளர்ந்தாலும் தன் அழகிய நல்ல உருவம் கெடாத பாவை’ (நற். 201) என்னுங் கருத்து விளக்குகிறது.

இக் கொல்லிப் பாவை பற்றி வழங்கும் கதையொன்றுண்டு. கொல்லி மலையின் வளமிகுந்த நிலையைக் கண்டு முனிவரும் அமரரும் இதனை இருப்பிடமாகக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு அசுரர்களாலும், இராக்கதராலும் இடையூறு நேர்ந்தது. அதனைத் தடுக்கத் தெய்வதச்சனைக் கொண்டு இப்பாவையை அமைத்தனர். இயங்கும் தன்மையுள்ள இப் பாவை அரக்கர் முதலியோரின் வாடை பட்டவுடன் நகைக்கும். கண்டவருடைய உள்ளத்தையும் விழியையும் கவர்ந்து, அவர்கட்குப் பெருங் காம நோயை உறுவித்து, மயக்கிக் கொல்லும் தன்மையுடைய இதனைக் கண்ட அரக்கர் முதலியோர் மயங்கி மடியலாயினர்.


அமைப்பு:

கொல்லி மலை தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில், நாமக்கல் ஆத்தூர் வட்டங்களில் உள்ள குன்றுத் தொடர். இம் மலையானது, தம்மம்பட்டி வரையில் நீண்டு செல்லும் துறையூர்ப் பள்ளத்தாக்கால் பச்சை மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. அயில்பட்டிக் கணவாயினால் போத மலைகளினின்றும் பிரிக்