பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

அதே ஆண்டில் மலையாள நாட்டில் கேனோலி (Canolly) என்ற ஒரு பெரிய ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் வடக்கில் நடந்த கிளர்ச்சிக்கும் கேனோலியின் படுகொலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர்பால் ஒரு சிலர் கொண்டிருந்த தனிப்பட்ட பகைமையும், பழியுணர்ச்சியும் காரணமேயன்றி, அவர் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை.

அதே ஆண்டில் சேலத்தில் ஒரு கலகம் தோன்றியது. இதுவும் தனிப்பட்டோர் பகையுணர்ச்சியின் காரணமாகவே எழுந்தது. ‘மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது பழமொழி யன்றாே ? சேலத்தில் வாழ்ந்த வெள்ளையரையும் அச்சம் என்ற கொள்ளை நோய் பீடித்தது. எல்லாரும் ஏர்க்காட்டைப் புகலிடமாகக் கொண்டனர். கலகக்காரரை எதிர்ப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபட்டனர். கிரேஞ்சின் அடியில் ஒரு நிலவறை அமைக்கப்பட்டு, ஆறு திங்கள்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அதில் சேர்த்து வைக்கப்பட்டன. கையில் துப்பாக்கி தாங்கிய காவல் வீரர்கள் கூரையின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டனர். மூன்று பெரிய கனல் கக்கும் பீரங்கிகள் அக்கட்டடத்தின் உச்சியில் பொருத்தப் பட்டுப் போருக்குத் தயாராக இருந்தன. அதன் மீது அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் ஆங்கிலக் கொடி பறந்து கொண்டிருந்தது.

ஏதேனும் அபாயம் நேருமென்று தோன்றினால், உடனே ஓர் அபாயச் சங்கு ஊதப்படும். உடனே ஏர்க்காட்டில் வாழும் எல்லா ஐரோப்பிய மகளிரும் குழந்தைகளும், ஆண்கள் பின் தொடர கிரேஞ்சில் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லோரும் அறிவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்தவிதத் தாக்குதலும் நேரவில்லை. அப்படி ஏதேனும் நேர்ந்திருந்தால், கேவலம் அத்தோட்ட