பக்கம்:மதன கல்யாணி-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மதன கல்யாணி குரோட்டன் துரையின் அபார சக்தியையும் அதிதீக்ஷண்ய புத்தியையும் கண்டு பெரிதும் வியப்பும் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தனர். அந்த வழக்கின் விவரமொன்றும் அந்த பாரிஸ்டருக் குத் தெரியாதிருக்கையிலேயே, அவர், சாட்சிகள் கையும் மெய்யுமாகக் கண்டதாகச் சொன்ன வாக்குமூலங்களை எல்லாம் சின்னாபின்னப் படுத்தி, மைனா கொலை செய்தானோ இல்லையோ என்ற சந்தேகத்தை எல்லோரும் கொள்ளும்படி செய்துவிட்டதைக் கண்டு யாவரும் அவரது அற்புதமான திறமையைப் பற்றி வெகுவாக மெச்சத் தொடங்கினார்கள். மைனர் விடுதலை அடைந்து விடுவான் என்ற ஒர் எண்ணமும் ஜனங்களி னது மனதில் தோன்றியது. வெட்கத்தினாலும், துக்கத்தினாலும், திகிலினாலும் குன்றித் துவண்டு தள்ளாடி நின்ற குற்றவாளிகள் இருவரும் ஒருவாறு துணவடைந்தனர்; அவர்களது முகம் தெளிவடைந்தது. உடனே ராயப்பேட்டை வைத்தியசாலையின் அதிகாரியான பெரிய டாக்டர் அடுத்த சாட்சியாக வரவழைத்து விசாரிக்கப்பட்டார். அவர் அடியில் வருமாறு வாக்குமூலம் கொடுத்தார்: நான் ராயப்பேட்டை வைத்தியசாலையின் பெரிய சர்ஜன் மூன்று நாளைக்கு முன் சிலர் ஒரு கிழவியை மோட்டார் வண்டியில் வைத்து ராத்தி சுமார் எட்டுமணி சமயத்தில் என்னுடைய வைத்திய சாலைக்குக் கொண்டு வந்தார்கள. உடனே என்னுடைய ஜாகைக்கு டெலிபோன் மூலமாகச் செய்திவர, நான் என்னுடைய மோட்டார் வண்டியில் உட்கார்ந்து உடனே வைத்தியசாலைக்கு வந்து அந்தக் கிழவியைச் சோதனை செய்து பார்த்தேன். அவளுடைய மார்பில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு பெருத்த ரணமிருந்தது. அந்த ரணத்தின் மேல் சர்க்கரை சுண்ணாம்பு ஆகிய இரண்டையும் குழப்பி அடைபோலப் பூசப்பட்டிருந்ததன்றி துணிகளினால் கட்டப்பட்ட கட்டுகளும் இருந்தன. அப்படி இருந்தும், அப்போதும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அந்தக் கிழவியின் சேலை முழுதும் உதிரத்தில் தோய்ந்து கிடந்தது. நான் பார்த்த போது அவளது கண்கள் மூடப்பட்டிருந்தன. உயிர் இருந்தது. இருதயம் வேலை செய்து கொண்டிருந்ததானாலும் மெதுவாக அடித்துக் கொண்டிருந்தது. நான் உடனே அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/156&oldid=853289" இலிருந்து மீள்விக்கப்பட்டது