பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


டஃப் சிகரம் :

சேர்வராயன் மலைகளில் காண்பதற்குரிய மற்றாென்று டஃப் சிகரம் (Duff’s Hill) ஆகும். இதிலிருந்து காண்போர் சேர்வராயன் மலைகளின் மேற்குச் சரிவுகளையும், அழகுடன் விளங்கும் குறுகிய பள்ளத்தாக்கையும காணலாம்.


காவேரி சிகரம் :

ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் சென்றால் இவ்வுச்சியை அடையலாம். சேர்வராயன் மலையின் வடபகுதியை இவ்விடத்திலிருந்து நன்கு காணலாம். சேர்வராயன் மலையிலேயே மிகவும் அழகான காட்சிகளை இப்பகுதியில்தான் காணலாம். இவ்விடத்திற்கு அண்மையில்தான் சிறந்த பழத் தோட்டங்களும் காஃபித் தோட்டங்களும் அமைந்துள்ளன. காஃபிக் கொட்டையைத் தூய்மைப்படுத்தும் ஆலையும் இங்குதான் உள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கும், அதன் துணையாறுகளின் படுகைகளும், அங்கிருந்து காண்போருக்குக் காட்சிதரும். வெள்ளாளக் கடைப்பாதையில் அவைகள் வளைந்து, மஞ்சக் குட்டையை நோக்கிச் செல்லும் காட்சியையும் கண்டு மகிழலாம்.

மக்களும் வாழ்க்கையும் :

ஐரோப்பியர்கள் குளிர் நாட்டில் வாழ்ந்தவர்கள். நம் நாட்டின் வெப்பநிலை அவர்கள் உடல் நலனுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால், ஏர்க்காடு போன்ற குறிஞ்சி நகரங்களில் வாழத் தொடங்கினர். எனவே ஏர்க்காட்டில் குடி புகுந்த மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பியரே. ஐரோப்பியர்களின் சமயமான கிருத்துவ சமயமே இங்கு வாழ்வோரின் சமயமாக விளங்குகிறது. ஐரோப்பியரல்லாத மக்கள் இந்து சமயத்தவரே. கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினரும் இங்கு வாழ்கின்றனர். கத்தோலிக்க நெறி, ஆங்கிலிகன் நெறி,