பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

வெள்ளையரின் குழந்தைகள் பயில்வதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இப்போது எல்லாரும் கல்வி பயில்கின்றனர்.


மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி:

ஏர்க்காடு உந்துவண்டி நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி பெருமிதமான தோற்றத்தோடு நம் கண்களில் தென்படும். சிறிய ஏரியின் பக்கமாக நேர் கிழக்கில் அமைந்துள்ளது. ஏர்க்காட்டில் தோட்ட முதலாளிகளாக விளங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகளுக்கு மேலைநாட்டு முறையில் ஒரு கல்விக்கூடம் தேவைப்பட்டது. திருவாளர் ஏஜீன் (Br. Eugene) என்ற கத்தோலிக்கப் பாதிரியார் கி. பி. 1917-இல் இப் பள்ளியைத் துவக்கினார். துவக்கும்போது ஏழுமாணவர்களே சேர்ந்தனர். ஆனால் தற்போது 320 மாணவர்கள் இதில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 280 பேர் தங்கிப் பயிலும் மாணவர்கள் (Boarders) 40 மாணவர்கள் வெளியிலிருந்துவந்து பயில்வோர் (Daystudents) இப்பள்ளி இப்பொழுது புனித கிப்ரியல் திருச்சபையாரால் நடத்தப்படுகிறது. சிறந்த ஆங்கிலப் பயிற்சியும், கலைப் பயிற்சியும், இங்கு அளிக்கப்படுகின்றன. இராக், சையாம், கேரளம், இலங்கை, மலேயா, முதலிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து கல்வி கற்கின்றனர்.

புனித இதய மகளிர் உயர்நிலைப் பள்ளி:

புனித இதய மகளிர் உயர்நிலைப்பள்ளி (Sacred Heart Girls High School) யானது கிளனி புனித சூசையப்பர் கன்னியரால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியானது கி. பி. 1894-ஆம் ஆண்டு திருவாட்டி வால்டர் அன்னை (Mother Valderbert)யின் தலைமையில்