பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv


வீரம் செறிந்த வேலூர்ப்புரட்சியைப் பற்றி அப்புரட்சி நடைபெற்ற பல்லாண்டுகட்குப் பின்னர் அதுகுறித்து வரலாறெழுத முனைந்த வெள்ளை வரலாற்றாசிரியர்களின் உள்ளத்தில், தோன்றிய எண்ணங்களே மேற்கண்ட வாசகங்கள். தமிழகதின் வட எல்லையில் நடைபெற்ற ஒரு புரட்சியைப் பற்றிக் கருதுந்தொறும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாகிய சரித்திர ஆசிரியர்கள் உள்ளம் எவ்வாறு கலங்கியது என்பதைத் தெளிவாகக் காட்டும் திறம் படைத்தவை அன்றோ இம்மொழிகள்?

ஆனால் எண்ணந்தோறும் ஏகாதிபத்தியக் கொடுங்கோலர்கள் நடுக்கங் கொள்ளும்படி நடைபெற்ற இப்பெரும் புரட்சியை - தமிழினத்தின் தலைவாயிலில் நடைபெற்ற வீரப் புரட்சியைப் பற்றி இந்நாள் வரை நாம் யாதும் அறியோம். ஆனால் எட்டாண்டுகட்கு முன்வரை நம்மைக் கல்நெஞ்சத்தோடு அடக்கி ஆண்ட பறங்கியரே அதிகம் அறிவர்.3 ஆம். அடிமைப் பட்ட ஒரு நாடு தன் பெருமையைத் தான் அறிந்து போற்றுவதும் கூட இயலாத செயல்போலும்! என்னே அடிமை வாழ்வின் கொடுமை ! நிற்க.

சென்ற சில மாதங்களில் எனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்


thousand, ready to join any successful insurretion, but there was at hand a Man (Col: Gillespie) at the head of a little knot of heroes, and the British Empire in India was saved from much bloodshed and dismay, if not from ruin. — Adventures of an Arcot Rupee - p. 271 3. இக்கூற்றின் உண்மை இந்நூலில் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ள ஆங்கில வரலாற்று நூல்களின் பட்டியலால் புலனாகும்.