பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய வரலாறு

5


காணலாம். ஆதொண்டைச் சக்கரவர்த்திக்குப்பின் தொண்டைநாடு கரிகாலன் ஆட்சியிலும், இளந்திரையன் ஆட்சியிலும் ஏற்றமுற்றது என்ற வாய்மையைச் சங்க இலக்கியங்களாலும் சரித்திர நூல்களாலும் நாம் அறியலாம். மணிமேகலை காலத்தில் தொண்டைநாட்டில் செங்கோல் செலுத்தியவன் இளந்திரையனாவன். அவனுக்குப்பின் சோழர் ஆட்சியில் செழித்திருந்த தொண்டைநாடு பல்லவாட்சிக்குட்பட்டது. கல்வியில் கரையிலாத காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களின் அறிவாலும் ஆற்றலாலும் தொண்டைநாடு கண்ட சீரும் சிறப்பும் பலவாகும். பல்லவர் காலத்திற்குப்பின் பிற்காலச் சோழர்கள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் தொண்டைநாட்டைக் கைப்பற்றி நானூறு ஆண்டுகட்குமேல் ஆட்சிபுரிந்தனர்.

பிற்காலச் சோழர்களுக்குப்பின் தொண்டைநாடு யாதவர்கள் கையில் சில காலமும் விஜயநகரப் பேரரசர்கள் ஆட்சியில் பல காலமும் வாழ்வு பெற்றது. இக் காலத்திற்குப்பின் முகம்மதிய ஆட்சியில் பிணிப்புண்ட தொண்டைநாட்டின் ஒளி தமிழகத்தின் ஏனைய பகுதிகளைப்போலவே மங்கலாயிற்று. இடையிடையே மராத் கியர்களுடைய படையெடுப்பிற்கும் இசையாகிய தொண்டைநாடு ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சியில் சிக்கியது. நாட்டின் மானத்தை ஆடிக் காற்றில் பட்டம் விடும் சிறுவர்களைப்போல் பறக்கவிடுவதில் சற்றும் பின் வாங்காத நவாபுகளின் போக்கை நாம் நன்கறிவோம். ஆர்க்காட்டு நவாபுகளோடு பங்கு போட்டுக்கொண்டு