பக்கம்:மதன கல்யாணி-3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 அந்த மொட்டை மெத்தை தரையிலிருந்து சுமார் ஒன்றரைத் தென்னை உயரமிருந்ததாகையால், அதிலிருந்து மனிதர் விழுந்தால், அவரது எலும்புகூட மிஞ்சாமல் நொறுங்கித் தூளாகி விடும். அதன் பொருட்டே அந்தச் சீமாட்டி அதிகமான ஆட்களை அந்த உப்பரிகையில் வைத்துக் கொள்ளாமல், தான் அழைத்தால் வரவேண்டும் என்று உத்தரவு செய்து, யாவரையும் வீட்டின் வாசலில் உட்கார வைத்திருந்தாள். கச்சேரியில் விசாரணை தொடங்கியவுடனே அந்தச் சங்கதி அஞ்சல் மூலமாக அவளுக்கு இரண்டே நிமிஷத்தில் எட்டியது. கச்சேரியில் இன்னார் இன்னார் வந்திருக்கிறார்கள்; மைனரும் பாலாம்பாளும் எப்படி இருக்கிறார் கள் என்ற விவரங்களை எல்லாம் சுருக்கெழுத்து குமாஸ்தா எழுதி அஞ்சல் மூலமாக அனுப்ப அனுப்ப, அந்த விவரங்களை எல்லாம் அந்தச் சீமாட்டி உணர்ந்து கொண்டாள். ஆகவே, அவள் அந்தக் கச்சேரியில் இருந்து கண்கூடாக எல்லாவற்றையும் பார்ப்பவள் போலவே விஷயங்களை உணர்ந்து கொண்ட வண்ணம் மேலே என்ன நடக்கும் மேலே என்ன வரும் என்ற பேராவல் கொண்ட வளாக உட்கார்ந்திருந்தாள். முதலில் மதனகோபாலனது வாக்கு மூலம் வந்தது. தன் பொருட்டாகத் தென்னஞ் சோலையில் ஒளிந்திருந்த கருப்பாயியை, மைனரும் பாலாம்பாளும் சேர்ந்து அடித்து வதைத்த விவரங்களை உணர, கல்யாணியம்மாளது மனமும் கண்களும் கலங்கின; கண்ணிர் மளமளவென்று பொங்கி வழிந்தது; அவள் மைனரையும் பாலாம்பாளையும் தனது மனதிற் குள்ளாகவே வெறுத்துத் துற்றினாள். அதன் பிறகு மதனகோபாலன் காலில் புண்பட்டு பலவீனமாக இருந் நிலைமையில், தனது உயிரை மதியாமல் கடலில் விழுந்து அந்தக் கிழவியை எடுத்து வந்ததை உணர, அவளது நெஞ்சம் பாகாயுருகியது. மறுநாளைய மாலையில் மைனர் கருப்பாயியைக் கத்தியால் குத்தினான் என்ற விவரத்தை உணர அவளது தேகம் கிடுகிடென்று ஆடியது. மைனர் மரண தண்டனை அடைவது நிச்சயம் என்ற எண்ணம் அவளது மனதில் உண்டாகிவிட்டது. அவள் பெருத்த குழப்பமும் கலக்கமும் கொள்ளலானாள். அந்த நிலைமையில் பாரிஸ்டர் குரோட்டன் செய்த குறுக்கு விசாரணை விவரங்களைக் கேட்கவே, அவளது உயிர் திரும்பியது. மனதில் ஒருவித நம்பிக்கை உண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/177&oldid=853312" இலிருந்து மீள்விக்கப்பட்டது