பக்கம்:மதன கல்யாணி-3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 265 தினங்களாக இந்த இரண்டு குடும்பங்களிலும் மகா சந்தோஷகர மான அனேக சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சாதாரணமாக நம்முடைய தேசத்து ராஜாங்கத்தில் கூட சந்தோஷப் பிரமேயங் களைக் கருதி, மகா கொடுமையாக தண்டிக்கப்பட்ட குற்றவாளி களைக் கூட மன்னித்து விடுகிறார்கள். அப்படி இருக்க, ஏதோ குழந்தை புத்தியால் கொஞ்சம் பிசகிப்போன நம்முடைய குழந்தையை நீங்கள் இப்படி முழுதும் புறக்கணிக்கலாமா எப்படி யாவது அவளை நீங்கள் கூடிமித்து ஏற்றுக்கொண்டு தான் தீர வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறிக் கெஞ்சி மன்றாடினான். கல்யாணியம்மாள், "தம்பி! அவளால் எனக்கு ஏற்பட்ட அவமானம் எவ்வளவென்பதை நீ தெரிந்து கொண்டால் இப்படிப் பேசமாட்டாய்; அவளை நான் ராமலிங்கபுரம் ஜெமீந்தாருடைய பிள்ளைக்குக் கட்டிக் கொடுப்பதாக அவர்களுக்குக் கடிதம் எழுதி யதை அறிந்து, அவளே, தான் கெட்டுப் போய் விட்டதாக அவர் களுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதியிருக்கிறாளே! அவளுடைய நெஞ்சழுத்தத்தை என்னவென்று சொல்லுகிறது! அதன் பிறகு, ராமலிங்கபுரத்தார் பெண்ணைப் பார்க்க இங்கே வந்த போது, நான் எப்படிப்பட்ட அயோக்கியமான காரியம் செய்து மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள நேர்ந்தது தெரியுமா? நம்முடைய கோமள வல்லியம்மாளை நான் துரைஸானி என்று காட்டினேன். இவளும் காயலாவாய்ப் படுத்திருப்பதாக நடிக்கும்படியாக நேர்ந்தது. அவளால் இத்தனை மானக்கேடும் துன்பமும் நேர்ந்தன. இனி அவளுடைய முகத்திலும் நான் விழிப்பேனா? அந்த ராமலிங்க புரத்தார் மறுபடியும் வந்தால் நான் என்ன சொல்லுகிறது?" என்று மிகவும் பதைப்பாக பேசினாள். அதைக் கேட்ட மதனகோபாலன் என்ன மறுமொழி சொல்வதென்பதை உணராமல் சிறிது நேரம் தயங்கி நிற்க, உடனே கோமளவல்லியம்மாள் மிகவும் பணிவாகப் பேசத் தொடங்கி, "அம்மா! நம்முடைய துரைஸானியம்மாளை நீங்கள் காப்பாற்றாவிட்டால், வேறே யார் காப்பாற்றப் போகி றார்கள்? அவள் உங்களுடைய வயிற்றில் பிறந்த குழந்தை யல்லவா? உங்களுடைய கை கண்ணில் பட்டுவிட்டால், கையைத் தண்டிப்பீர்களா! ஏதோ அவள் தவறு செய்திருந்தாலும், அது கடைசியில் மகா சிரேஷ்டமான சம்பந்தமாகவே முடிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/268&oldid=853413" இலிருந்து மீள்விக்கப்பட்டது