பக்கம்:மதன கல்யாணி-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 131 திறந்து கொண்டு வெளியே வந்தார்கள். நான் உடனே வேகமாகப் போய், சுவரின் முடக்கில் மறைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இவர்கள் இருவரும் அவளைத் துக்கிக் கொண்டு வந்து அலையில் எறிந்து விட்டு உள்ளே போய்க் கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்கள். நான் உடனே திரும்பி வந்து அலைகளில் விழுந்து நெடுந்துரத்துக் கப்பால் இருந்த கிழவியைக் கண்டுபிடித்து மிகுந்த சிரமப்பட்டுக் கரையில் கொண்டு வந்து சேர்த்தேன். அவளுக்கு அப்போது உயிர் இருநததாகத் தெரிந்தது; ஆகையால் அவளைத் துக்கிக் கொண்டு எங்களுடைய பங்களாவை நோக்கிப் போனேன். நான் மிகவும் பலவீனமாக இருந்தவனாகையால், சமுத்திரத்தி லிருந்து அவளைத் தூக்கிக்கொண்டு மணலில் நடந்த போது எனக்குக் கண்கள் இருண்டு போய்விட்டன. மயக்கம் வந்து விட்டது. நான் அவளைப் போட்டுக் கொண்டு கீழே வீழ்ந்து விட்டேன் - என்றான். அந்த வரலாற்றைக் கேட்ட மைனரும் பாலாம்பாளும் திடுக் கிட்டுப் பெருத்த திகிலும் குழப்பமும் அடைந்தனர். ஏனென்றால், தாங்கள் ரகசியத்தில் செய்ததாக நினைத்திருந்த சங்கதிகள் யாவற்றையும் மதனகோபாலன் ஒளிந்திருந்து கேட்கிறானே என்ற பெருத்த அச்சமும் கவலையும் உண்டாகிவிட்டன. அவனது பாரிஸ்டர்களுக்கும் அந்த வரலாறு தெரியாதாகையால் அவர்களும் ஒருவாறு கவலை கொண்டிருந்தனர். உடனே மதனகோபாலன் மேலும் பேசத் தொடங்கினான்: அதன் பிறகு நான் கண்களைத் திறந்து பார்த்த போது, எங்களு டைய பங்களாவில் நான் ஒரு படுக்கையில் விடப்பட்டிருந்தேன். அந்தக் கிழவியும் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும் வேலைக்காரர்களும் எங்களுக்கு உபசரணைகள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களைத் தேடிக்கொண்டு வந்ததாகவும், மணலில் நாங்கள் இருவரும் கிடக்கக்கண்டு துக்கிக் கொண்டு வந்ததாகவும் அவர்கள் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். அன்றைய ராத்திரியும், மறுநாள் பகல் முழுதும் நானும் அந்தக் கிழவியும் படுக்கைகளில் இருந்தோம். கிழவி இரண் டொரு தடவை எழுந்து மைனரைப் பற்றிய வரலாறுகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/135&oldid=853266" இலிருந்து மீள்விக்கப்பட்டது