பக்கம்:மதன கல்யாணி-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மதன கல்யாணி தெரியாமல் பறக்கிறது. இருதயம் பூரித்துப் படீரென வெடித்து போய்விடுமோ என்னும் நிலைமையில் இருக்கிறது! அதைக் கண்ட கோமளவல்லியம்மாள் மிகுந்த அச்சமும் கவலையும் கொண்டு, "அம்மா! பதற வேண்டாம். சாந்தப்படுத்திக் கொள்ளுங் கள். உங்களுடைய பலவீனமான நிலைமையில் நீங்கள இப்படிப் பதறினால் அது உடம்புக்குக் கெடுதல் செய்யும். இங்கே வீணை கற்றுக் கொடுத்த மதனகோபாலன தான் சொந்த பிள்ளையாம்; ஜடஜி சொல்லுவது நிஜமா அல்லவா எனபதை நீங்கள் திருப்தி கரமாக அறிந்து கொள்வது அவசியமான விஷயம்; நான் படிக் கிறேன கேளுங்கள்" என்று கூறிய வண்ணம் டாக்டர் கேசவலு நாயுடுவின் வாக்குமூலத்தையும், சின்னையா நாயுடுவின் வாக்கு மூலத்தையும், ஜட்ஜியின் தீர்மானத்தையும் எடுத்து அதி விரைவாகப் படித்து, அதற்கு மேல் மதனகோபாலன மொட்டை மெத்தையிலிருந்து வீழ்ந்த விவரத்தை இரண்டொரு வார்த்தை களில் கூறினாள். அவள அவ்வாறு சொல்லி முடிக்கும் முன் கல்யாணியம்மாள் சடக்கென்று கட்டிலை விட்டுக் கீழே இறங்கினாள், அவளது அப்போதைய தோற்றம் மகா பயங்கர மான பைத்தியமும் ஆவேசமும் கொண்டவளது தோற்றம போல இருந்தது. அவளது தேகம் கட்டிலடங்காமல் துடிதுடித்துப் பறந்தது. அவளது பிரமாதமான ஆவேசத்தைக் கண்ட தாதிகளும் கோமளவல்லியம்மாளும் அஞ்சி நடுங்கி வாயைத் திறந்து வார்த்தை சொல்லவும் பயந்து நின்றனர். அப்போது அந்தச் சீமாட்டி பொன்னம்மாளை நோக்கி, "அடி பொன்னி உடனே ஒடி மோட்டார் வண்டியை வாசலில் நிறுத்தச்சொல்; மைலாபபூருககுப் போய் மதனகோபாலனைப் பார்க்க வேண்டும்" என்றாள். அவள் அந்த வாாத்தைகளைச் சொல்வதற்கு முன் அவளது நெஞ்சடைத்து பலவிடங்களில் வாய் குழறிப் போய் விட்டது. தேகம் புயற் காற்றில் அசைந்து சின்னாபின்னப்படும் மெல்லிய மாந்தளிர் போல ஆடி அசைந்து முறுக்கிக் கொள்ளுகிறது. அப்போது பொன்னம்மாள் மோட்டார் வண்டி தயாரிக்க ஓடினாள். தனது தாயின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோமளவல்லியம்மாள் பணிவாகவும் அச்சமாகவும் தனது தாயை நோக்கி, "அம்மா! உங்கள் உடம்பில் சிறிய மஸ்லின் துணி தான் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/223&oldid=853364" இலிருந்து மீள்விக்கப்பட்டது