பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

அறத்தின் குரல்

என் தவறுகளை மறந்து மன்னித்துவிடு அப்பா. உன் சகோதரர்களாகிய பாண்டவர்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தனியே தங்கி நாடிழந்த நிலையில் இருக்கிறார்கள். நீ உடனே அவர்கள் பக்கம் வந்து சேர்ந்து மூத்தவன் என்ற பொறுப்போடு அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.” -குந்தி மனமுருக வேண்டிக் கொண்டாள்.

“தாயே! கடமையைக் காட்டிலும் நன்றி பெரியது அல்லவா? நினைவு தெரியாத குழந்தையாக இருக்கும் போதே நீங்கள் பெற்ற பாசத்தையும் மறந்து என்னை ஆற்றில் மிதக்க விட்டுவிட்டீர்கள். என்னை வளர்த்து மனிதனாக்கியவன் துரியோதனன். இப்போது நான் இருக்கும் சிறப்பான நிலைக்கு அவனே காரணம். என்னை ஒரு நாட்டுக்கு அரசனாக்கித் தன் சகோதரர்களும் பிற சிற்றரசர்களும் வணங்கிப் போற்றும்படிச் செய்ததும் அவனே. இன்னும் எண்ணத் தொலையாத எத்தனையோ விதங்களில் அவனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஒரு நாள் துரியோதனன் துணைவியாகிய பானுமதியும் நானும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தோம். ஆட்டம் சுவை நிரம்பிய ஒரு கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது, வெற்றி எனக்காக அவளுக்கா என்று அறியத் துடிதுடிக்கும் ஆர்வத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாடிக் கொண்டிருந்த மாளிகையின் வாயில்புறத்தைப் பார்த்து அவள் அமர்ந்திருந்தாள். அதற்கு எதிர்புறமாக நான் அமர்ந்திருந்தேன். விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே துரியோதனன் வாயில் வழியாக உள்ளே வந்திருக்கிறான். நான் வாயிற்புறத்துக்கு நேரே முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததனால் அவன் வாயில் வழியாக உள்ளே நுழைவதைக் கவனிக்கவில்லை. ஆனால் அவள் பார்த்து விட்டாள். கணவன் முன்னால் எழுந்து நிற்க வேண்டிய மரியாதைக்காகக் குபீரென்று எழுந்திருந்தாள். விளையாட்டு வெறியில் திளைத்திருந்த நான், அவள் ‘எனக்கு