பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

305


“சரி? நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஆனாலும் நான் கேட்கும் மற்றோர் வேண்டுகோளையாவது நீங்கள் மறுக்காமல் நிறைவேற்ற வேண்டும்.”

“அது என்ன வேண்டுகோள்?”

“எங்களுக்கும் பாண்டவர்களுக்கும் நிகழ இருக்கும் போரில் நீங்கள் ஆயுதம் எடுத்துப் போர் புரியக் கூடாது. வேறு எந்த வகையிலும் பாண்டவர்களுக்கு உதவிக் கொள்ளலாம்.”

“சரி! துரியோதனா! உன் விருப்பப்படியே ஆயுதம் எடுத்துப் போர் புரியாமலே பாண்டவர்களுக்கு உதவுகின்றேன். இன்னொரு விஷயம், நான் ஒருவன்தான் உன் பக்கம் சேர்வதற்கில்லை. என்னைச் சேர்ந்த யாதவர்களையும் பலராமனையும் விரும்பினால் நீ உன் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தடையில்லை.”

“அப்படியானால் நான் இப்போதே பலராமனைப் போய்ப் பார்க்கலாமா?”

“ஓ! கட்டாயம் போய்ப் பார். அவன் உனக்கு உதவியாக வர இணங்குவது உறுதி.”

“நான் போய் வருகிறேன்” -துரியோதனன் விடை பெற்றுக்கொண்டு சென்றான். கண்ணனும் அர்ச்சுனனும் தனிமையில் விடப்பட்டனர்.

“அர்ச்சுனா!”

“என்ன சுவாமி?”

“கேட்டாயா துரியோதனன் வேண்டுகோளை? நான் ஆயுதம் எடுக்காமல் உங்களுக்கு உதவி புரிய வேண்டுமாமே! எப்படி அப்பா ஆயுதமின்றி உதவுவது?”

“உதவ முடியும் சுவாமீ! என் தேரைச் செலுத்துங்கள்! அது போதும். நீங்கள் ஆயுதமே எடுக்க வேண்டாம்.” கண்ணன் அவ்வாறே தேர் செலுத்துவதாக ஒப்புக் கொண்டு அர்ச்சுனனையும் அழைத்துக் கொண்டு தருமனைக் காண

அ. கு. -20