பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

அறத்தின் குரல்

சமையற்காரனாகிய ‘பலாயனன்’ என்ற தடியன், பெண்ணைப் போலப் பதுங்கியிருந்து தன்னைத் தாக்குகிறான்’ என்று உணர்ந்து கொள்ளச் சிறிது நேரம் ஆயிற்று கீசகனுக்கு. இருவரும் உல்லாச அரங்கத்தின் நடுவே உக்கிரமாகப் போர் செய்யலானார்கள். வெகு நேரத்துப் போருக்குப் பிறகு கீசகனின் உயிரற்ற சரீரத்தைக் கீழே தரையில் கிடத்தி விட்டுத்தான் தலை நிமிர்ந்தான் வீமன். ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி மலர்ந்த முகத்துடனே அவனருகில் வந்தாள்.

வீமன் அவளை நோக்கி நகைத்துக் கொண்டே “திரெளபதி! இனிக் கவலை இல்லை. உன்னைப் பற்றி நின்ற சனியன் ஒழிந்தது! நீ நிம்மதியாக உன் இருப்பிடத்திற்குச் சென்று உறங்கு” என்றான். அவளும் தன் நன்றி ததும்பும் பார்வையாலும் அன்பு நிறைந்த சொற்களாலும் வீமனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். வீமனும் போர் செய்த ஓய்வைத் தீர்த்துக் கொள்ளுவதற்காகச் சமையலறைக்குச் சென்று படுக்கையில் படுத்தான். வீமனுக்கும் கீசகனுக்கும் போர் நடந்தபோது கேட்ட குழப்பமான ஒலிகளால் கீசகனுடைய தம்பியர்கள் விழித்துக் கொண்டு பூந்தோட்டத்தின் பக்கமாக ஓடி வரலானார்கள். ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள் சிக்கனை அழித்து முடித்துவிட்டுத் திரெளபதியும் வீமனும் தத்தம் இருப்பிடத்திற்குப் போய்விட்டனர். வந்தவர்கள் தீவட்டிகளைக் கொண்டு இருளைப் போக்கிப் பூந்தோட்டத்தில் இருந்த உல்லாச அரங்கிலே தேடிப் பார்த்ததில் கீசகனுடைய உயிரற்ற உடல் இரத்த வெள்ளத்தினிடையே விழுந்து கிடப்பதைக் கண்டனர். கீசகன் தம்பியர்க்கு ஒரு புறம் அடக்க முடியாத வருத்தமும் மற்றோர் புறம் அடக்க முடியாத சினமும் ஏற்பட்டது.

“அண்ணனின் சாவுக்கு அந்தப் பாழாய் போன விரதசாரிணிதான் காரணமாக இருக்கவேண்டும். அண்ணனின் சடலத்தை எரிக்கும்போது அந்த நாசமாய்ப்