பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

அறத்தின் குரல்

கொண்டான். ஆனாலும் அந்த இளம் வீரன் அத்தனை பேருக்கும் நடுவில் மனந்தளர்ந்து விடவில்னல கைகள் ஓய்ந்துவிடவில்லை. துணிந்து போர் செய்தான்! எதிரே நின்றவர்கள் மேல் சரமாரியாக அம்புகளைத் தூவினான். தனது வில் முனையில் அவர்களைத் திக்கு முக்காடச் செய்தான். வெகு நேரம் போர் தொடர்ந்து நிகழ்ந்தது. ஆச்சரியம் கொள்ளத்தக்க விதத்தில் அபிமன்னன் வெற்றியடைந்தான். அவனை எதிர்த்தவர்கள் கர்ணன் உட்பட எவரும் அவனுக்கு முன் நிற்க முடியவில்லை. நிலைகலங்கி ஓடுமாறு பகைவர்களை விரட்டியடித்து விட்டுத் தேரோடு இலக்கண குமாரனையும் கைதியாக்கிக் கொண்டு சென்றான் அபிமன்னன். இந்தக் கடைசி நிலையில் கடைசி எதிரியாகச் சல்லியன் ஓடிவந்து வளைத்துக் கொண்டான். அபிமன்னன் பொறுமை இழந்து விட்டான். அவன் மனத்தில் தோன்றிய ஆத்திரம் கைவழியே வில்லில் கலந்தது. நெருப்புச் சரங்களைப் போல அம்புகள் கிளம்பின. சல்லியனின் முகத்திலும் தோள்பட்டைகளிலுமாக அம்பு நுனிகள் துளைத்து நின்றன. வலி பொறுக்க முடியாமல் தேரிலிருந்து கீழே குதித்து ஓர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்னன் மேல் அடிப்பட்ட புலிபோல் பாய்ந்தான் சல்லியன். இந்த நேரத்தில் ஏதோ காரியமாக அங்கு வந்த வீமன் தன் கையிலிருந்த கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு சல்லியனை எதிர்த்தான். வீமனுக்கும் சல்லியனுக்கும் கதைப் போர் ஆரம்பமாயிற்று. சரியான சமயத்தில் வீமன் வந்து காப்பாற்றியிருக்க வில்லையானால் சல்லியன் ஓங்கிய கதை அபிமன்னனை நொறுக்கியிருக்கும், வீமனின் கதாயுதம் சல்லியனைப் புடைத்துப் புடைத்து ஓய்ந்து போகச் செய்து கொண்டிருந்தது. இறுதியாக வீமன் கொடுத்த அடி சல்லியன் உடலிலிருந்து எலும்புகளைப் பூட்டுவிட்டு நொறுங்குமாறு செய்தன. மயங்கி மூர்ச்சை போட்டு அப்படியே கீழே விழுந்து விட்டான் சல்லியன்.

வீமன் நல்ல நோக்கத்தோடுதான் அபிமன்னனுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் அபிமன்னனுடைய மனத்தில் அது