பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அறத்தின் குரல்

இரவோடு இரவாக மாளிகைக்கு திரும்பினான். தன்னைக் கொல்லுவதற்கு முயலும் சூழ்ச்சிக்காரர்கள் யாவர் என்பதை அவன் அறிந்து கொண்டான்.

ஆயினும் சூழ்ச்சிக்கு ஆளாவது போல நடித்து அதை வெல்லுவது தான் உண்மையான திறமை என்று தெரிந்து கொண்ட வீமன் வெளிப்படையாக ஏதுமறியாதவன் போல அமைதியாக இருந்தான். மற்றோர் நாள் வீமனைக் கொல்வதற்காக அவன் இருக்குமிடத்தில் அவனுக்குத் தெரியாமல் நச்சுப் பாம்புகளை நிறைத்து வைத்திருந்தனர். வீமன் இந்த சூழ்ச்சியை அறிந்தும் தன் இருக்கையை அடைந்தான். முசுட்டுப் பூச்சிகளைக் கையால் நசுக்கிக் கொல்லுவது போல் வஞ்சகர்கள் இட்டுவைத்த நச்சுப் பாம்புகளைச் சிதைத்துக் கொன்றான். இதன் பின் மீண்டும் வீமனையும் மற்றவர்களையும் கங்கைக்கு நீராட வருமாறு ஒரு நாள் துரியோதனாதியர்கள் அழைத்தனர். கங்கையாற்றில் இடையிடையே கழுக்களை (ஈட்டிகளைப் போவ நுனிப் பகுதி கூர்மையான ஒரு வகை ஆயுதங்கள்) இட்டு வைத்து வீமனை அந்த இடங்களிலே பாயுமாறு செய்து, கொல்ல வேண்டுமென்று இம் முறை துரியோதனாதியர் சூழ்ச்சி செய்திருந்தனர். இதற்குப் பாண்டவர்களை அழைத்தபோதே ‘வீமனின் அழிவு’ ஒன்றே துரியோதனாதியர்களின் நோக்கமாக இருந்தது. சூதுவாதறியாத பாண்டவர் சம்மதித்து நீராடச் சென்றனர். நீராடும் போது கழுக்களை நட்டுவைத்த இடங்களை முன்பே தெரிந்து கொண்டிருந்த கெளரவர்கள் ஜாக்கிரதையாக வேறு பகுதிகளில் ஒதுங்கி நீராடினர், வீமன் கழுக்களில் பாய்ந்து அழிந்து விடுவானோ என்று அஞ்சத்தக்க நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக இறையருள் துணை செய்தது. எந்தெந்த இடங்களில் கழுக்கள் நாட்டப்பட்டி ருந்தனவோ, அங்கே கண்ணபிரான் வண்டுகளாகத் தோன்றி வீமனைக் காப்பாற்றினார். வீமன் கழுக்கள் இருந்த இடங்களை விலக்கி விட்டுத் திறமாக நீராடிக்