பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. வேடம் வெளிப்படுகிறது!

அசுவத்தாமன் தோற்றோடியதுடன் போர் முடிந்து விடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாகப் போர் மீண்டும் பெரிய உருவில் வளர்ந்துவிட்டது. வீட்டுமர், விதுரர் முதலிய நெருங்கிய உறவினர்களான பெரியோர்கள் துரியோதனனுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடனுக்காக மனம் விரும்பாம்லிருந்தும் அர்ச்சுனனோடு போர் புரிய வந்துவிட்டார்கள். துரியோதனனோ யாரோடும் போருக்கு வராமல் தன்னைச் சுற்றி ஒரு மெய்காவற்படையைக் காவல் வைத்துக் கொண்டு பதுங்கியிருந்தான். நிலைமையைப் புரிந்து கொண்டு தானும் தன் கடமையைச் செய்யலாம் என்று தீர்மானித்துக் கொண்ட அர்ச்சுனன் தன்னை எதிர்த்து வளைத்துக் கொண்டு நின்றவர்கள் மேல் நான்கு திசையிலும் மழையைப் போல அம்புகளைத் தூவினான். அவனுக்கு வெறியே பிடித்து விட்டது. சக்கர வட்டமாகச் சுழன்று வன்மை வாய்ந்த அஸ்திரங்களை எல்லாம் தூவினான். அவன் வெறி தணிந்து வில்லில் அம்பு தொடுப்பதை நிறுத்தி விட்டுத் தன்னைச் சுற்றிப் பார்த்தபோது யாருமே இல்லை. இரண்டாம் முறை உற்றுப் பார்த்தபோது பலர் தொலைவில் ஓடிக் கொண்டிருப்பதையும் சிலர் கீழே விழுந்து கிடப்பதையும் பதுங்கிக் கிடப்பதையும் கண்டான்.

அப்படி விழுந்து கிடந்தவர்களில் துரியோதனன் முதலியவர்களும் இருந்தனர். அர்ச்சுனனும் அவனுக்குத் தேரோட்டியாக இருந்த உத்தரனும் தம் தேரிலிருந்து கீழே இறங்கி வெற்றிக்கு அடையாளமாக எவையேனும் வேண்டும் என்று கீழே விழுந்து கிடந்த துரியோதனன் முதலியவர் களுடைய ஆடையாபரணங்களைப் பறிக்கலாயினர். அந்த ஆடையாபரணங்கள் விராடன் மகளாகிய உத்தரையின் விளையாட்டுப் பொம்மைகளுக்கு ஆகுமென்று எண்ணிக்