பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

அறத்தின் குரல்

பெருஞ்சினம் கொண்டு கதையைத் தூக்கிக் கொண்டு விராடனைத் தாக்குவதற்குக் கிளம்பி விட்டான்.

இருவரையும் தடுத்து நிறுத்திய தருமன் சாந்தமாகத் “தம்பியர்களே! கீழ் மக்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். ஒருவர் நம்மைக் கொலை செய்தாற்போன்ற பெருந்துன்பத்தையே நமக்குச் செய்திருப்பினும் அவர் செய்த ஒரே ஒரு சிறு நன்றிக்காவது அவரை நாம் வணங்க வேண்டும். விராடன் எத்தனை துன்பங்களைச் செய்திருந்தாலும் ஓராண்டுக்காலம் நாம் மறைந்து வாழுவதற்கு இடமளித்திருக்கிறான். அந்த நன்றியை நாம் மறக்கக் கூடாது.” விளக்கமாகத் தருமன் கூறிய இந்த அறிவுரையைக் கேட்டு அருச்சுனனும் வீமனும் சினம் நீங்கினர். அப்போது விராடன் தன் அமைச்சர்கள் புடைசூழப் பல பரிசுகளுடனும் காணிக்கைப் பொருள்களுடனும் அங்கே வந்தான். உத்தரகுமாரன், சுதேஷ்ணை முதலியவர்களும் உடன் வந்திருந்தனர். விராட மன்னன் பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். தருமனும் விராடனும் அன்பு மிகுதியினால் ஒருவரை ஒருவர் மார்புறத் தழுவி இன்புற்றனர்.

“விராடா! உன் போல் நற்பண்பு நிறைந்த மன்னர்களை உலகெங்கும் தேடித் திரிந்தாலும் காண்பது அரிது” என்று நன்றி சுரக்கும் உள்ளத்தோடு கூறினான் தருமன்.

“இல்லை இல்லை. அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் என் அரண்மனையில் என்னோடு நான் இன்னார் என்று அறிந்து கொள்ள முடியாமலே ஓராண்டு காலம் தங்கியிருக்கிறீர்கள். இது எனக்குக் கிடைத்த பெறும் பேறு. இதற்காக நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” -என்று உபசாரமாக மறுமொழி கூறினான் விராட மன்னன்.

“உன் அரண்மனையில் தங்கியிருந்தபோது எங்களுக்கு ஒருவிதமான குறைவும் இல்லை. இனியும் இங்கிருந்து வெளியேறிச் செல்கின்ற விசேஷத்தால் எங்களுக்கு யாவும்