பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

அறத்தின் குரல்

சல்லியன், கண்ணன், இருவரும் முறையே அவரவர் தேர்களைச் செலுத்தினர். போர் வெகுநேரம் நிகழ்ந்தது. கர்ணனும் அர்ச்சுனனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போரிட்டனர்.

சர்வக்ஞனான சிவபெருமான் இருவேறு மனிதர்களாக அவதாரம் எடுத்து இரண்டு மேருமலைகளை இரண்டு விற்களாக வளைத்து யுத்தம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது கர்ணனும் அர்ச்சுனனும் போர் செய்த காட்சி.

போரில் திசைக்கோணங்கள் நடுநடுங்கும்படி இடையிடையே இருவரும் சங்கநாதம் செய்து கொண்டனர். அர்ச்சுனனிடம் இருந்த சங்கு ‘தேவதத்தம்’ - என்னும் பெயரை உடையது. அதை அதன் முழக்கியவுடன் அதற்குப் போட்டியாகக் கர்ணனும் ‘பராபரம்’ என்னும் பெயரை உடைய தன் சங்கை எடுத்து முழக்கினான். சக்தியும் தெய்வீகமும் வாய்ந்த அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொண்டனர். சூரிய புத்திரனாகிய கர்ணனிடம் தகப்பன் கொடுத்த சிறப்பான கணைகள் சில இருந்தன. அர்ச்சுனன் எய்த அம்புகளை எல்லாம் தன்னிடமிருந்த விசேஷக் கணைகளால் அறுத்து முறித்தான் கர்ணன். இருவரில் எவர் கை ஓங்கும்? எவர் கை தாழும் என்று சொல்ல முடியாதபடி போர் நடந்து கொண்டிருந்தது. அர்ச்சுனனுடைய தேர் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல் செய்வதற்கு எண்ணிய கர்ணன் அம்புகளாலேயே அர்ச்சுனனுடைய தேரைச் சுற்றி ஒருவலை போலப் பின்னி அசைய முடியாமலும் நகர முடியாமலும் செய்துவிட்டான். கண்ணபிரான் இதைக் கண்டார். உடனே கர்ணனுடைய தேரைச் சுற்றிலும் அதே போல் அம்புகளால் வலை போல் அமையுமாறு செய்தார். கர்ணன் தன் வினை தன்னைச் சுட்டதைக் கண்டு திகைத்தான். ஒன்றும் செய்ய முடியாமல் மயங்கி நின்ற கர்ணன் போரை நிறுத்திவிட்டான். அர்ச்சுனனும் போரை நிறுத்தினான், அர்ச்சுனன் தேரைச்