பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

அறத்தின் குரல்

மற்போர் புரிவேன்” என்றான். உடனே மனமுவந்த விராடன் அவனுக்குச் சிறந்த மரியாதைகள் செய்து தன் அரண்மனையிற் சமையற்காரனாக நியமித்துக் கொண்டு விட்டான். வீமன் பலாயனன் என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டு விராட மன்னனிடம் சமையற்காரனாக நடித்துக் கொண்டிருந்தான்.

அடுத்த முறை அர்ச்சுனனுடையது. முன்பு ஒரு முறை தேவர்கோன் தலைநகரமாகிய அமராபதியில் தங்கியிருந்த போது ஊர்வசியால், ‘நினைத்தபோது பேடியாக மாறிக் கொள்ளலாம்’ என்ற சாபமொன்றை அர்ச்சுனன் பெற்றிருந்தான் அல்லவா? அந்தச் சாபத்தை இப்பொழுது மாறுவேடத்துக்குப் பயன்படுத்த விரும்பினான் அவன். பேடியாக மாறிச் சென்றே விராடனிடம் வேலை பெறலாம் என்று தனக்குள் முடிவு செய்து கொண்ட அவன் பேடியாக மாறிப் ‘பிருகந்நளை’ என்ற பெயர் பூண்டு அரசனைக் காண்பதற்காகச் சென்றான்.

“நான் இசைக் கலையிலும் நாட்டியக் கலையிலும் வல்லவள். என் பெயர் பிருகந்நளை. முன்பு அர்ச்சுனனுடைய அந்தப்புர மகளிருக்குப் பேடியாக இருந்து பல்கலைகளைக் கற்பித்து நிறைந்த அனுபவம் பெற்றிருக்கின்றேன். தங்கள் அந்தப்புரத்தில் எனக்கு ஒரு பணி அளித்தால் நல்லது” -என்று விராடனுக்கு முன்னால் சென்று வேண்டிக் கொண்டான். தன் மகள் உத்தரைக்கு இசையும் நாட்டியமும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற அவ(னை)ளை நியமித்தான் அவன். அப்போதிலிருந்து அர்ச்சுனன் பிருகந்நளையாகி அந்தப் புரத்தில் போய் மறைந்தான்.

இயற்கையிலேயே நகுலனுக்குக் குதிரையைப் பழக்கும் கலையில் நல்ல பழக்கம் உண்டு. எனவே, அவன் குதிரை பழக்கும் பணியாளனாக அரண்மனைக்குச் சென்றான். மாறுவேடத்தோடு கடிவாளம் குதிரை பழக்கும் கயிறு முதலியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு அரண்