பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

அறத்தின் குரல்

சந்தித்து அமாவாசை என்றைக்கு என ஆராய்ந்தனர். அவர்கள் இருவரும் மறுநாள் அமாவாசை திதியில் சந்திக்க வேண்டியதை மறந்து திகைப்பினால் முறைதவறி அன்றைக்கே சந்தித்துவிட்டதனால் அமாவாசையும் அப்போதே சதுர்த்தசி நாளிலேயே உண்டாகிவிட்டது. பாண்டவர்கள் இதைக் கண்டு திகைத்து வியந்தனர்.

“தருமா! என் மாயத்தினால் உனக்கு வாக்களித்த படியே அமாவாசையை ஒரு நாள் முன்பே வரவழைத்து விட்டேன். துரியோதனன் பாவம்! நாளைக்குத்தான் அமாவாசை என்றெண்ணிக் கொண்டு பேசாமலிருப்பான். போரில் யார் முதல் முதலில் களப்பலி கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி. தயங்காமல் இன்றைக்கே துரியோதனனை முந்திக் கொண்டு உன் சார்பில் நீ களப்பலி கொடுத்து விட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்!”

“நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் யாரைக் களப்பலி கொடுப்பது?” -தருமன் கேட்டான். அவன் இதைக் கேட்கும்போது அரவானும் அருகில்தான் இருந்தான். அவன் ஏற்கனவே துரியோதனனுக்கு வாக்களித்திருந்ததனாலும், சிறிதும் இரக்கமின்றி, “நீ உன் உயிரைக் களப்பலியாகக் கொடு!” -என்று கேட்பதற்கு அச்சமாக இருந்ததனாலும் பாண்டவர்கள் அவனிடம் கேட்காமலிருந்தனர். அரவானாக வலுவில் முன்வந்து ஏற்றுக் கொள்வான் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதுவும் வீணாயிற்று. அரவானை வழிக்குக் கொண்டு வருவதற்குக் கண்ணன் ஒரு நாடக மாடினான்.

“சரி தருமா! களப்பலியாக முன்வருவதற்கு இங்கு எல்லோருமே தயங்குகிறார்கள் போலிருக்கின்றது. உங்களுக்காக நான் தயார்! இதோ, எனது இந்த உடலை உங்கள் வெற்றிக்காகப் பலி கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்கவில்லை. உங்கள் நன்மை பெரிது! என் உயிர் அதற்கு