பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

அறத்தின் குரல்

அம்புகனை அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ள முடிந்ததே ஒழியத் தடுக்க இயலவில்லை. அர்ச்சுனனின் சாபம் தோள்களும் இரத்தக் காடாசிவிட்டது. தன் முன் நின்று சோதனைக்காகச் சிவபெருமான் போர் என்கின்ற திருவிளையாடலைப் புரிகிறான் என்பதை அறியமுடியாத அர்ச்சுனன் வேடன் மேல் அளவற்ற ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். ஆத்திரத்தோடும் மனக்கொதிப் போடும் அவள் செலுத்திய அம்பு வேடனாக இருந்த சிவபெருமானின் முடியைத் துளைத்தது. முடிந்த சடை மறையில் கங்கை முகிழ்த்துச் சிதறியது. சடைகள் தூள் பரந்தன். சிவகணங்களுக்கு இதைக் கண்டு மிகவும் செதுப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்து வில்லை எடுத்துக் கொண்டு அர்ச்சுனன் மேல் பாய்ந்தார்கள். நல்லவேளையாக வேடன் அவர்களுடைய சினத்தை அடக்கினான், மறுபடியும் இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விற்போர் ஆரம்பமாயிற்று போர் வெற்றி தோல்வி காண இயலாத சமநிலையில் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இறுதியில் வேடன் குறி வைத்து எய்த அம்பு ஒன்று அர்ச்சுனனுனடய வில்லின் நாணை அறுத்து வீழ்த்தி விட்டது. விசயன் வெறுங்கையனானான். வில் நாணறுந்து திகைத்த அர்ச்சுனன் கையிலிருந்த வில் தண்டினால் வேடன் மேல் தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஓர் அடி அடித்து விட்டான்.

வேடனாக இருந்த சிவபெருமான் அடி பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தவர் போல மூர்ச்சையற்றுக் கீழே விழுந்து விட்டார். சர்வேசுவரானாகிய அவர் மேல் பட்ட அந்த அடி உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் மேலும் பஞ்ச பூதங்களின் மேலும், அவற்றாலாகிய பிரகிருதியின் மேலும் ஒருங்கே விழுந்தது போல வலித்தது, வேடன் மூர்ச்சை தெளிந்து மறுபடியும் எழுந்தான். ஆத்திரத்தோடு அர்ச்சுனனை மற்போர் செய்வதற்கு அழைத்தான். அர்ச்சுனன் இணங்கினான், வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் மற்போர்