பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

409


“தயக்கம் ஒன்றுமில்லை துரியோதனா! பாண்டவர்கள் எல்லா விதத்திலும் வலிமை வாய்ந்தவர்களாயிற்றே?” -என்றுதான் யோசித்தேன். தருமனுக்கு முன்னும் பின்னும் காவலாக நிற்பவர்கள் யார் தெரியுமா? விற்போர் செய்வதற்கென்றே படைக்கப்பட்டவை அர்ச்சுனனுடைய கைகள், அத்தகைய வில்வீரன் தருமனுக்கு முன்புறம் நின்று காவல் புரிகிறான். உடல் வலிமையில் ஒப்பற்றவனாகிய வீமன் பின்புறம் நிற்கிறான். அவ்வாறு இருக்கும்போது தருமனைச் சிறைசெய்யலாம் என்று நாம் நினைப்பதாவது பொருந்துமா? நமக்குக் கிடைத்திருக்கும் பிறவிக்காலம் முழுவதையும் செலவிட்டாலும் செய்ய முடியாத காரியம் இது. ஒரு வேளை மகாபலசாலிகளாகிய வீமன், அர்ச்சுனன் ஆகிய இருவரையும் தருமனுக்கு உதவி செய்ய இயலாமல் அவனிடமிருந்து சிறிது காலம் பிரித்துவைக்க முடியுமானால் நமது கருத்தும் நிறைவேற முடியும். வேறு எந்த வகையாலும் நமது கருத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது! என்னுடைய அபிப்பிராயம் இது தான்“ துரோணர் இவ்வாறு கூறி முடித்தார். அவருடைய பதில் துரியோதனனுடைய ஆத்திரத்தைத் தணிப்பதற்கு மாறாக அதிகமாக்கியது.

அப்போது துரியோதனனுக்கு மிகவும் வேண்டியவனான திரிகர்த்தன் என்பவன் கூறத் தொடங்கினான்:-“துரோணர் கூறுகிறபடியே அர்ச்சுனனும், வீமனும் தருமனைக் காவல் புரிகிறார்கள் என்பது உண்மையானால் நாளைய பன்னிரண்டாம் நாள் போர் முழுவதும் வீமனையும் அர்ச்சுனனையும் தருமன் அருகில் செல்ல முடியாதபடி நாங்கள் தடுத்து நிறுத்தி வைக்கிறோம். அப்போது தருமன் தனியாகத்தான் நிற்பான். துரோணர் தருமனின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு அவனைக் கைது செய்து சிறைப்பிடித்து விட வேண்டும். இது நாங்கள் செய்கின்ற சபதம். இந்தச் சபதத்தை நிறைவேற்றவில்லையானால் கொடுங்கோல் அரசனும், பிறன் மனைவியை விரும்புகிறவனும் அடைகிற பாவங்களை நாங்களும் அடை