பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5. குதுப்மினார்

டில்லி நகரில் காலெடுத்து வைத்தவுடன் விண்ணை இடித்துப் பெருமிதத்துடன் நிற்கும் குதுப்மினார் தான் நம் கண்களில் படும். டில்லி நகரில் எப்பகுதியி விருந்தும் குதுப்மினாரைக் காணலாம். அதேபோலக் குதுப்மினாரின் மேல் ஏறி நின்று டில்லி நகரம் முழுவதையும் காணலாம். இதன் உயரம் சுமார் 12 மீட்டர். உலகிலேயே மிக உயர்ந்த கோபுரம் இதுதான். உலகில் வரலாற்றுப் புகழ் பெற்ற வேறு பல கோபுரங்களும் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவை இத்தாலி நாட்டுப் பைசா நகரில் உள்ள சாய்ந்த, கோபுரமும், சீன நாட்டில் பீகிங் நகரில் உள்ள பெரும்பகோடாவும் ஆகும். ஆனால் இவையிரண்டையும்விட உயரத்தால் மிக்கது டில்லி பெருநகரில் உள்ள குதுப்மினார்.

மினார் என்ற அரபுச் சொல்லுக்குக் கோபுரம் என்பது பொருள். இதன் அருகில் சென்று இதை நிமிர்ந்து பார்ப்பவரின் உள்ளத்தில் பல கேள்விகள் எழும். குத்புதீன் மன்னன் இவ்வளவு உயர்ந்த கோபுரத்தை எதற்காக எழுப்பினான்? இக் கோபுரத்தை எழுப்பிய சிற்பி யார் ? எழு நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இக் கோபுரம் கீழே விழாமல் எப்படி நிற்கிறது? என்பனவே அக் கேள்விகள். தொழுகைக்காக மக்களை அழைக்கும் அறிவிப்பை ஒலிபரப்புவதற்காகவே இவ்வுயர்ந்த கோபுரத்தைக் குத்புதீன் எழுப்பி-