பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

அறத்தின் குரல்

தனமாகத் துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டதை எண்ணிக் குமுறினான். வாய்விட்டு அழமாட்டாத குறையாக மனம் கலங்கினான். குமுறினால் என்ன, கலங்கினால் என்ன? சத்தியம் செய்த பின் எப்படி மறுப்பது? கொடுத்த வாக்கை எடுக்க முடியுமா? வில்லிருந்து புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையும் திரும்பக் கிடைக்கவா போகின்றன?

“என்ன அரவான்? நீதான் மகா வீரனாயிற்றே? ஏன் அப்பா தயங்குகின்றாய்?”

“தயங்கவில்லை. களப்பலிதானே வேண்டும்? என்னைக் கொடுக்கின்றேன்! எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன், எனக்கு உயிரினும் வாக்குப் பெரிது.” அரவான் சம்மதித்து விட்டான். வஞ்சக வலையில் வீழ்ந்து விட்டதை எண்ணி மனம் கொதித்துக் கொண்டே அவன் தன் சம்மதத்தைத் துரியோதனனுக்குத் தெரிவித்தான். வந்த காரியங்கள் இரண்டுமே தடையற்ற வெற்றியாக முடிந்ததை எண்ணி மகிழும் மனத்தோடு துரியோதனனும் அத்தினாபுரிக்குத் திரும்பினான். சகாதேவனிடமும் அரவானிடமும் துரியோதனன் வந்து பேசி வாக்குப் பெற்றுச் சென்ற இந்த நிகழ்ச்சி பின்பே பாண்டவர்களுக்கும் கண்ணனுக்கும் தெரிந்தது. ஏமாந்துவிட்டதை எண்ணி ஏங்கினர் பாண்டவர். துரியோதனன் சூழ்ச்சியினால் செய்த ஏற்பாட்டை நாமும் சூழ்ச்சியினாலேயே முறியடிக்க வேண்டும் என்றான் கண்ணன்.

“மாயவனாகிய நீயே அந்தச் சூழ்ச்சியை எங்களுக்குக் கூறி உதவ வேண்டும். நாங்கள் அறத்தையும் உன்னையும் தவிர வேறு எதை நம்புவது?” என்று மனம் உருகக் கண்ணனிடம் வேண்டிக்கொண்டனர் பாண்டவர்கள். கண்ணன் கூறினான்: “துரியோதனன் களப்பலி கொடுப்பதற்கென்று நல்ல வேளையும் நல்ல ஆளையும் பார்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான். அவனை முந்திக் கொண்டு அதே