பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18


அழகுத் தெய்வமான முருகப் பெருமானுக்கு எழில்மிக்க ஒரு கோவிலை அமைத்தான். அக் கோவிலே அமைப்பதில் தன் முழுத் திறமையையும் காட்டினான் அச்சிற்பி.

பெரிய கோவிலின் திருப்பணிகள் யாவும் முடிவுற்றன. இனிச் சிவலிங்கத்தைக் கருவறையில் எழுந்தருளச் செய்ய வேண்டும். அதற்காக அரசன் ஆதிசைவர்களை வரவழைத்தான். அவர்களும் மருந்து அறைத்து இலிங்கத்தைப் பந்தனம் செய்தனர். ஆனால் இலிங்கம் பொருந்த வில்லை. மருந்து இளகிப் போயிற்று. அரசன் உள்ளம் மிகவும் வருந்தினான்; யாது செய்வதென்று அறியாமல் மனம் குழம்பினன். அப்போது வானத்தில் ஓர் அசரீரி கிளம்பியது. "கருவூர்த் தேவரை அழைத்து இப்பணியைச் செய்! உன் கவலை தீரும்” என்று கூறியது அக்குரல். உடனே அரசன், “கருவூர்த் தேவர் என்பவர் யார்? அவர் எங்கிருக்கிறார்? அவரை இப்பொழுதே இங்கு அழைத்து வர வேண்டும்” என்று ஆணையிட்டான்.

ஆனால் அருகிலிருந்த ஒருவருக்கும் கருவூர்த் தேவர் யார் என்பது புரியவில்லை. அரசன் மீண்டும் பெரும் குழப்பத்திலாழ்ந்தான். அரசனின் குழப்பத்தைப் போக நாதர் என்ற சித்தர் உணர்ந்தார். சித்தரால் ஆகாத செயலும் உண்டோ? கருவூர்த் தேவர் எங்கிருக்கிறார் என்பதை அவர் தம் ஞானநோக்கால் உணர்ந்து தெரிவித்தார். கருவூர்த்தேவர் சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலையில் வாழ்ந்து வந்தார். இராசராசன் வேண்டு-