பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

லாம். பண்டைய எகிப்து மன்னர்கள் தங்களுடைய பிணங்களைப் புதைக்கும்போது, என் வளவோ பெருஞ் செல்வத்தை உடன் வைத்துப் புதைத்தார்கள் என்பது நன்கு தெரிகிறது. சமாதிப் பள்ளத்தாக்கில் வேலைபார்த்த தாழ்ந்த வேலைக்காரரிலிருந்து, உயர்ந்த அதிகாரிகள் வரை எல்லாரும் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டனர் என்பதும், சமாதித் திருட்டு அவர்களுடைய அன்றாடத் தொழிலாகவே மாறிவிட்டது என்பதும் புலனாகின்றன.

பிற்காலத்தில் பாரோ மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது. திறமையற்ற மன்னர்கள் எகிப்து நாட்டை ஆளத் தொடங்கினர். அவர்கள் காலத்தில் சமாதித் திருட்டு மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியது. கள்வர்களைத் தடுத்து நிறுத்த அம்மன்னர்களால் முடியவில்லை. அம்மன்னர்களின் ஆட்சி ஒழிந்த பிறகு, எகிப்து நாட்டில் அரச குருமார்களின் ஆட்சி தோன்றியது. அவர்களில் ஒரு மன்னன் சமாதித் திருட்டை ஒழிக்கப் புது வழியொன்றைக் கையாண்டான். சமாதிப் பள்ளத்தாக்கிலிருந்து எல்லாச் சமாதிகளையும் தோண்டி எடுத்தான். அவைகளை யெல்லாம் நகருக்கு நெடுந்தொலைவில், யாரும் நெருங்க முடியாத ஓரிடத்தில் புதைத்து விட்டான். அச்சமாதிகள் மூவாயிரம் ஆண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் மண்ணிற்குள் உறங்கிக் கொண்டிருந்தன. சென்ற நூற்றாண்டிலேயே அவைகளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு உலகின்