பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


வாறு தானே குடை கவித்து நிற்பான். ஒரு சமயம் சிற்பிகளின் தலைவன் நுணுக்கமான சிற்ப வேலையில் ஆழ்ந்திருந்தான். அருகில் அரசன் வந்து நிற்பதையும் அவன் அறியவில்லை. சிற்பி, தன் அடைப்பைக்காரனின் பெயரைச் சொல்லி, 'வெற்றிலை மடித்துக் கொடடா' என்று சொன்னான். அந்நேரத்தில் அடைப்பைக்காரன் ஏதோ வேறு வேலையாகச் சென்றிருந்தான். அடைக்காய் இல்லாமையால் சிற்பியின் கவனம் சிதையுமே என்று அரசன் கருதினான். ஆகையால், அரசன் தானே அடைப்பைக்காரனாக இருந்து, வெற்றிலை மடித்துக் கொடுத்தானாம். அவ்வெற்றிலைச்சுருளை வாயிலிட்டு மென்ற சிற்பி, அது வழக்கத்திற்கு மாறாக நறுமணம் வீசுவதை உணர்ந்தான். தலை நிமிர்ந்து நோக்கினான். எதிரில் மன்னர் மன்னன் நின்று கொண்டிருந்தான். சிற்பி மனங்கலங்கினான். "அரசர் பெரும! நான் பெருந் தவறிழைத்து விட்டேன். நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்" என்று வேண்டினான்.

"நீவிர் ஏதும் பிழை செய்யவில்லை. ஆண்டவன் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் உமக்குத் தொண்டு செய்வதை என் நற்பேறாகக் கருதுகிறேன். ஆண்டவன் அழகன். அவனை அழகுக் கோவிலில் அமைக்கிறீர் நீவிர். அவ்வழகுப் பணிக்குத் தொண்டு செய்வது என் கடமை" என்று கூறினான் இராசராசன். மன்னனின் அழகுணர்ச்சியை உணர்ந்த சிற்பி பெருமகிழ்ச்சியடைந்தான்; பெரிய. கோவிலின் வேலை முற்றுப் பெற்றதும், அங்கேயே

2