பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96


பரவியது. ஐரோப்பாக் கண்டம் முழுவதும் கிறித்தவ சமயம் பரவி விட்டது. எட்டாம் நூற்றாண்டில் போப்பாண்டவருக்கு அரசியலில் பெருத்த செல்வாக்கு ஏற்பட்டது. புனித உரோமானியப் பேரரசின் மன்னர்கள் போப்பாண்டவரால் முடி சூடப் பெறுவதைப் பெரும் பேறாகக் கருதினர். ஒரு காலத்தில் புனித உரோமானியப் பேரரசே போப் பாண்டவர்களின் ஆணைக்கு உட்பட்டிருந்தது. காலப் போக்கில் அரசியல் மாறுபாட்டால் இப்பேரரசின் எல்லை குறைந்துவிட்டது. கி. பி. 1870 ஆம் ஆண்டு இத்தாலியர் எஞ்சிய பகுதிகளையும் பிடுங்கிக் கொண்டனர். இப்போது போப்பாண்டவரின் ஆட்சியில் உள்ளவை, அவர் தங்கி வாழும் பெரிய மாளிகையும், புனித பீட்டர் தேவாலயமும், இவற்றைச் சூழ்ந்துள்ள தோட்டம் முதலியவையுமே. இவற்றின் மொத்தப் பரப்பு 108 ஏக்கர். போப் பாண்டவரின் ஆணைக்கு உட்பட்ட இச்சிறிய இடத்தையே வாத்திகன் நகரம் என்றும், வாத்திகன் மாளிகை என்றும் குறிப்பிடுகின்றனர்.

கலைச் செல்வங்கள்

உலகில் வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களில் முதன்மையானது, இப்போது இத்தாலி நாட்டின் தலை நகரமாக விளங்கும் உரோமாபுரி நகரம்தான். மேலை நாட்டு மக்களுக்குக் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகிய உயர்ந்த செல்வங்களை வழங்கிய பெருமையில் பெரும்பங்கு இந்நகரையே சாரும். சீசர், பாம்பே,ஆண்டனி போன்ற மாபெரும் வீரர்களையும், சிசெரோ போன்ற பெரும் பேச்சாளர்