பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பூர்ணசந்திரோதயம்-2 பட்சமாகவும் வாஞ்சையாகவும் காப்பாற்றி வந்தது, திடீரென்று அத்தைக் குப் பகrவாத நோய் உண்டாகி வாயடைத்துப் போனது, தாங்கள் பணமில்லாமல் துன்புற்றது, திருவாரூர் பாங்கிக்குப் போய் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டது, தனது அக்காளான கமலம் தஞ்சைக்குப் போனது, சில நாட்கள் கழித்து அவள் உண்டியலும் கடிதமும் அனுப்பியது, உண்டியலை மாற்றும் பொருட்டு தான் திருவாரூருக்குப் போனது, பாங்கியில் சாமியாரைக் கண்டது, அவர் கபடமாகத் தொடர்ந்து வந்தது, தான் அவரை அனுப்பிவிட்டு பங்களாவை நோக்கி வந்து கொண்டிருக்கையில் கள்கடைக்கு அருகில் முரடர்கள் வந்து தன்னை வளைத்துக் கொண்டது, சாமியார் வந்து தன்னைத் தப்பவைத்து அவரது மடத்துக்கு அழைத்துக்கொண்டு போனது, அவ்விடத்தில் அவர் தன்னை வைத்துவிட்டு பெரிய பண்ணைப் பிள்ளையை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனது, அதன்பிறகு அவர் வராததைக் கண்டு தான் பின்கட்டிற்குப் போனது, கொல்லைப் பக்கத்துத் திண்ணையில் சாமியாரும் முரடர்களும் இருந்து பேசிக்கொண்ட விவரங்களைக் கேட்டுத் தவித்தது, பிறகு முன் பக்கத்திற்கு வந்து குளத்திற்குப் போக வேண்டும் என்ற முகாந்திரத்தைக் கூறி தான் வெளியில் வந்து வாய்க்காலைக் கடந்து ஓடியது, பிறகு அந்த முரட்டு மனிதர்கள் வந்து மறுபடியும் தன்னைக் கட்டித் தூக்கிக் கொண்டு மடத்துக்குப் போனது, அப்போது தெய்வச்செயலாக இரட்டை மாட்டு வண்டி வந்தது, பிறகு தான் கூச்சலிட்டது முதலிய சகலமான விருத்தாந்தங்களையும் விஸ்தாரமாக எடுத்துக் கூறினாள். அவைகளைக் கேட்ட கலியாணசுந்திரம் என்ற அந்த வடிவழகன் அவள் விஷயத்திலும், அவளது அக்காள், அத்தை முதலியோரது விஷயத்திலும் அளவற்ற இரக்கமும், அதுதாபமும், தயாளமும் நிறைந்தவனாய் மனம் நைந்து உருகினது அன்றி, கபட சன்னியாசியின் மீது அடங்காக்