பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பூர்ணசந்திரோதயம்-2 கண்டாள். சாமியார் உள்ளே வந்தவுடனே வாசற் கதவை வெளியில் தாளிட்டுவிட்டு ராஜபாட்டையில் காவல் காத்திருக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட ஆளே அப்படி மறைந்தவன் என்பதை ஷண்முகவடிவு யூகித்துக் கொண்டாள். அவளது உடம்பு கிடுகிடென்று ஆடியது. முடிமுதல் அடிவரையில் உரோமம் சிலிர்த்து நின்றது. வியர்வை குபீரென்று கிளம்பியது. அவளது மனதில் பெருத்த திகிலும் கவலையும் எழுந்து குடிகொண்டன. பக்கத்திலுள்ள குளத்தங் கரைக்குத் தான் மெதுவாகப் போய் ஏதாவது மறைவான ஒரிடத்தில் ஒதுங்கி அங்கே இருந்து இருளின் உதவியால் தப்பித்து அப்பால் போய் அவர்கள் காணமுடியாதபடி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவளாய் அந்தப் பெண்ணரசி வடக்குத் திக்கை நோக்கி மெதுவாக நடக்கலானாள். தன்னைக் கண்டு மறைந்த ஆளும் கபடசன்னியாசியும் கூறையின்மேலிருந்த ஆள்களும், ஒருகால் தனக்குப் பின்னால் தொடர்ந்து வந்து தூரத்தில் இருந்தபடி தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பார்களோ என்ற திகில் அவளது மனதில் எழுந்து வதைத்தது. ஆனாலும், தான் தப்புவதற்கு அது ஒன்றே கடைசியான உபாயமாக அவள் மதித்தாள். ஆகையால், மிகவும் துணிந்து அந்த வகையாக முயற்சி செய்யலானாள். அந்தப் பாதை திருவாரூரிலிருந்து தெற்குப் பக்கமாக திருத்தருப்பூண்டிக்குப் போகும் பெரிய பாதை. அந்த மடம் அந்தப் பாதையின் மேற்குப் பக்கத்தில் கிழக்கு முகமாகக் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்திற்கு வடக்கில் தாமரைக் குளம் ஒன்று அமைந்திருந்தது; அந்த இடத்தில் பாட்டையின் இரண்டு பக்கங்களிலும் அரையாள் ஆழமிருந்த வாய்க்கால்கள் போய்க் கொண்டிருந்தன. அந்த வாய்க்கால்களுக்கும் பாட்டைக்கும் நடுவில் தாழை, பிரம்பு, வெண்காட்டாமணக்கு முதலியவற்றின் புதர்களும், பூவரச மரங்களும் வளர்ந்து வேலிபோல அடர்ந்திருந்தன. குளத்தங் கரைக்குப் போன ஷண்முகவடிவு நாற்புறங்களிலும் திரும்பிப்