பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51 தடியைத் தாங்கள் மெதுவாகப் பிடுங்கிக்கொண்டு, அவரை அடித்து நையப் புடைத்துக்கொன்று போட்டுவிட்டு ராஜ பாட்டைக்குப் போய் அவ்விடத்தில் நின்ற வண்டிக்குள் ஷண்முகவடிவை வைத்து வண்டியை விசையாக ஒட்டிக் கொண்டு திருவாரூர் பக்கம் போய் விட்டால் பெரிய பண்ணைப்பிள்ளை ஆள்களோடு வந்தால் அவர்கள் தங்களைக் காண மாட்டார்கள் என்ற நினைவோடு அவர்கள் துணிந்து பாணாத்தடி வைத்திருந்த மனிதர்மீது பாய அவர் வயதில் நிரம்பவும் பாலியராகவும் மகா வசீகரமானசுந்தரபுருஷராகவும் காணப்பட்டார். ஆனாலும், அதற்கிணங்க, அவர் சிங்கக் குட்டியின் பலம் வாய்ந்தவராய் இருந்தமையால், அவர் அவர்களுக்குக் கொஞ்சமும் இடங்கொடுக்காமல் பின்னால் நகர்ந்து நகர்ந்து, முன்னுக்குப் பாய்ந்து பம்பரம் சுழலுவது போலத் தமது சரீரத்தைத் தந்திரமாக உபயோகப்படுத்தித் தமது கையிலிருந்த பாணாத்தடியால் அந்த முரடர்களினது கால்களிலும், கைகளிலும், விலாவிலும், மண்டையிலும் படேர் படேர் என அடித்து இரத்தம் பெருகச் செய்து அவர்கள் ஐயோ அப்பாவென்று வீரிட்டுத் துள்ளிக் குதித்துச் சிதறி அங்கும் இங்கும் போகும்படி கலக்க ஆரம்பித்தார். எதற்கும் அஞ்சாத மகா முரட்டு மனிதர்களான தங்கள் ஐவரையும், எதிர்பாராத வகையில் வளைத்துக் கொண்டு மூர்த்தண்ணிய மாகப் புடைத்துத் தங்களை நொறுக்கும் அந்த யெளவனச் சிறுவனது அபூர்வ சக்தியையும் அபார செளரியத்தையும் கண்டு திக்பிரமை கொண்டு கலகலத்துப் போப் அந்த வீராதிவீரன் யாராக இருப்பானென்று நினைத்து வியப்பே வடிவாக இருந்து அவனைப் பிடிக்கும் வீண் முயற்சி செய்த அந்த ஐந்து மனிதர்களில் மூவர்தங்களது மண்டைகளில் பட்ட அடிகளினால் பொறிகலங்கிப் போனவர்களாய் மூர்ச்சித்து வேரற்ற மரங்கள் போலக் கீழே வீழ்ந்து விட்டனர். மற்ற இருவரும் பிரமாதமாக பயந்து அந்த இடத்தை விட்டு ஒட்டமாக ஒடிப்போய் விட்டனர். பாணாத்தடியோடு அவர்களுடன் சண்டை செய்த அந்த மனிதர்