பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 67 விடியற்காலையில் ரஸ்தாவில் நின்றுகொண்டிருந்த முரட்டு மனிதர்கள் உள்ளே நுழைந்து தங்களுக்கு எவ்விதத் துன்பம் இழைக்காமல் போயிருப்பதைக் காண, அவர்கள் என்ன கருத்தோடு வந்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. உண்மையில் ஆள்கள் வராமல் இருக்க, முத்தம்மாள் தனது மனப் பிராந்தியினால், ஆள்கள் வந்திருக்கிறார்கள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பாளோ என்றும், அல்லது அப்படி வந்தவர்கள் யாராவது வழிப்போக்கர்களாக இருப்பார்களோ என்றும் ஷண்முகவடிவு பலவாறு யூகங்கள் செய்துசெய்து பார்த்தாள். தனது அக்காளினால் அனுப்பப்பட்ட பணம் முழுதும் போய் விட்டதே என்ற எண்ணம் அந்த யெளவன மின்னாளின் மனதில் அப்போதைக்கு அப்போது தோன்றியது. ஆனாலும், விலை மதிப்பற்ற நிதிக் குவியலைக் காட்டிலும் அரிதான தனது தேக பரிசுத்தத்திற்கு எவ்விதக் களங்கமும் நேராமல் போனதே ஒரு கோடி பெறுமென்று ஆறுதல் தோன்றி அவளை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அவளும் முத்தம்மாளும் மனக் குழப்பம் அடைந்து சித்தப் பிரமை கொண்டவர்கள் போல மாறி முற்றிலும் சோர்ந்து தளர்ந்து தங்களது கடமைகளையும் வீட்டு அலுவல்களையும் ஒருவாறு கவனித்தவர்களாய், இராத்திரிக்காலமே வராமல் எப்போதும் பகலாகவே இருந்துவிடக் கூடாதா என்று கோரியவர்களாய் , அன்றையதினம் இரவு வந்து விடுமே என்றும், மறுபடியும் ஒருவேளை அந்த முரடர்கள் வந்து விடுவார்களே என்றும் கவலை கொண்டு திகிலடைந்து நிரம்பவும் வருந்திப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். பிற் பகல் மூன்று மணி சமயமாயிற்று; ஷண்முகவடிவு தஞ்சையிலுள்ள தனது அக்காளுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அவளால் அனுப்பப்பட்ட கடிதமும் உண்டியலும் வந்தது, உண்டியலை மாற்றும் பொருட்டு தான் திருவாரூருக்குப் போனது, அவ்விடத்தில் தனக்கு அபாயங்கள் நேர்ந்தது,